வீரப்பனுக்கு பணம்: முழு விசாரணை தேவை
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் பிடியிலிருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கும் விவகாரத்தில் ரூ. 20 கோடிபணம் கைமாறியதாக கர்நாடக முன்னாள் காவல்துறை அதிகாரி சங்கர் ராம் சிங் கூறியுள்ளது குறித்து விரிவாகவிசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கூறியதாவது: வீரப்பன் பிடியிலிருந்து ராஜ்குமாரை மீட்கும் நடவடிக்கையின்போது ரூ. 20 கோடி பணம்கொடுக்கப்பட்டதாகவும், அது அப்துல் கரீம் டெல்கியிடமிருந்து பெறப்பட்டதாகவும் சங்கர் ராம் சிங் கூறியுள்ளார்.
இதேபோன்ற கருத்தையே முன்னாள் கர்நாடக டிஜிபி தினகரும் அடிக்கடி கூறி வந்தார். தனது புத்தகத்திலும்இதுபற்றி அவர் விரிவாக எழுதியுள்ளார். பொறுப்பான பதவியில் இருந்தவர்களே இதுபற்றி அடிக்கடி கூறிவருவதால் இந்த விவகாரம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விரிவாக விசாரணை நடத்த வேண்டும்.
பா.ஜ.க. கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கவில்லை. பாஜக கூப்பிட்டால் மட்டுமே தேசிய ஜனநாயகக்கூட்டணிக் கூட்டங்களில் அதிமுக எம்.பிக்கள் கலந்து கொள்கிறார்கள்.
தேர்தல் தோல்விகளை நான் பாடமாக மட்டுமே எடுத்துக் கொள்வேன். அதனால் மனம் உடைந்து போய் விடமாட்டேன். ஒவ்வொரு தோல்வியும் எனக்கு ஒரு பாடமாகும்.
தேர்தல் தோல்வி காரணமாகவே, சலுகைகளை அதிகமாக வழங்குவதாக அதிமுக அரசு மீது கூற முடியாது. மக்கள்விரும்பியதை நாங்கள் கொடுத்து வருகிறோம்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அதிக அளவில் உள்ளனர். தேவைக்கு அதிகமாகவே உள்ளனர். இதுதவிர 15,000தற்காலிகப் பணியாளர்களும் கூடுதலாக உள்ளனர். அனுதாப அடிப்படையில் அவர்கள் பணியில் தொடர அரசுஅனுமதித்துள்ளது.
எனவே இப்போதைக்கு புதிய ஊழியர்களை தேர்வு செய்ய முடியாத நிலையில் அரசு உள்ளது என்றார்ஜெயலலிதா.
தமிழகத்தில் கும்பாபிஷேகங்கள் தள்ளிவைக்கப்பட்டது தொடர்பான பிரச்சினை முடிந்து விட்டது. அனைத்துக்கோவில்களுக்கும் கும்பாபிஷேக தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது முடிந்து போன விஷயம்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெறவும், நெல்லை மருத்துவக் கல்லூரியில்கூடுதலாக 50 சீட்களையும் பெறவும் மாநில அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.
இவற்றை நிச்சயம் பெறுவோம். கடந்த பல ஆண்டுகளாகவே அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதிவழங்குவதில் இந்திய மருத்துவக் கவுன்சில் பாரபட்சம் காட்டுகிறது. இப்போது இதில் அரசியலும் சேர்ந்துள்ளது.இதில் அதிமுக அரசு மீது குறை கூறுவதில் நியாயம் இல்லை.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பிரச்சனை இருப்பதாகவும், குழப்பம் நிலவுவதாகவும் சிலர்திட்டமிட்டே பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர். தற்போதைய குழப்பங்களுக்கு அவர்கள்தான் காரணம்.
சட்லெஜ், ரவி, பியாஸ் நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை பஞ்சாப் மாநிலம் ரத்து செய்துள்ளது கடுமையாககண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்சினையில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
பிரதமரால் இந்தப் பிரச்சினையில் தீர்வு காண முடியாவிட்டால் உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கோரிஅதன்படி நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.
அன்று கர்நாடகம் இதேபோல நடந்தது, இன்று பஞ்சாப் நடந்து கொண்டுள்ளது. அரசியல் சட்டத்தின் கீழ் நடக்கும்கடமை இரு மாநிலங்களுக்கும் உண்டு. சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் அராஜகமாகநடந்து கொள்ளக் கூடாது. கர்நாடகம் காட்டிய வழியில்தான் இன்று பஞ்சாப் நடந்து கொண்டுள்ளது என்றார்ஜெயலலிதா.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications