மெர்கண்டைல் வங்கி: ப.சியிடம் நாடார்கள் மனு
டெல்லி:
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரன் மீண்டும் விலைக்கு வாங்க முயற்சிப்பதாகவும்,அதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தடுக்க வேண்டும் என்று கோரி மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம், நாடார் அமைப்புகள் மனுகொடுத்துள்ளன.
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டது தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி. கடந்த 1928ம் ஆண்டு நாடார் சமுதாயத்தினருக்காக,அச் சமுதாயத்தினரால் தொடங்கப்பட்ட இந்த வங்கியை சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளத் தொழிலதிபர் சிவசங்கரன் விலைக்குவாங்கினார்.
வங்கியின் பெரும்பாலான பங்குகளை வைத்திருந்த பிரபல நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், அந்தப் பங்குகளை சிவசங்கரனிடம்விற்றுவிட்டது. இதனால் வங்கியின் கட்டுப்பாட்டு அவர் வசம் வந்தது.
இதையடுத்து வங்கியை மீண்டும் தங்கள் சமூகத்தினரிடமே ஒப்படைக்குமாறுசிவசங்கரனை நாடார் சமூகத்தினர் வலியுறுத்தினர். ஆனால்தான் வாங்கிய விலையை விட கூடுதலாக கொடுத்தால்தான் வங்கியை திருப்பித் தர முடியும் என்று சிவசங்கரன் கூறி விட்டார்.
இதையடுத்து மாலை முரசு பத்திரிக்கை அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தன் தலைமையில் வங்கி மீட்புக் குழு அமைக்கப்பட்டு நாடார்சமூகத்தினரிடம் நிதி திரட்டப்பட்டது. பங்குகள் மூலம் திரட்டப்பட்ட அந்தப் பணத்தைக் கொண்டு வங்கியை சிவசங்கரனிடம் இருந்துநாடார்கள் மீண்டும் வாங்கினர்.
இந் நிலையில் மெர்க்கண்டைல் வங்கியை மீண்டும் சிவசங்கரனே வாங்கப் போவதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. இதையடுத்துபல்வேறு நாடார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இந்திய நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி, டெல்லி சென்றுப.சிதம்பரத்தை சந்தித்துள்ளனர்.
சிவசங்கரன் மீண்டும் மெர்க்கண்டைல் வங்கியை வாங்க அனுமதிக்கக் கூடாது. சிவசங்கரனுக்கு உடந்தையாக பா.ராமச்சந்திர ஆதித்தன்செயல்படுகிறார். எனவே இந்த கூட்டுச் சதியை முறியடிக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உதவ வேண்டும் என்று அவர்கள்கோரியுள்ளனர்.
இந்தக் குழுவினர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து இப் பிரச்சினையில் உதவுமாறு கேட்டுக் கொள்ளவுள்ளனர்.
-
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications