முத்திரை தாள் மோசடி: பெண் ரகசிய வாக்குமூலம்
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உதவி போலீஸ் கமிஷ்னர் சங்கரின் ஜாமீன் மனு2வது முறையாக சென்னை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
ரூ. 30,000 கோடி போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கரின்ஜாமீன் மனுவை சென்னை எழும்பூர் பெருநகர நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந் நிலையில் அவர்இரண்டாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடந்தபோது, போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைதாகியுள்ள நிஜாமுதீனின்உதவியாளர் சாய்ரா பானுவை வழக்கிலிருந்து விடுவிக்க சங்கர் ரூ. 2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரம்இருப்பதாக சிபிஐ வழக்கறிஞர் டேனியேல் வாதாடினார்.
இந்த வாதத்தை அடிப்படையாகக் கொண்டு சங்கரின் ஜாமீன் மனுவை நீதிபதி அருள்ராஜ் நிராகரித்தார்.
பெண் ரகசிய வாக்குமுலம்:
இந் நிலையில், எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி ராமநாதன் முன்னிலையில் ஒரு பெண்உள்பட 2 பேர் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடையே மேலும் பல போலீஸ் அதிகாரிகள் குறித்த தகவல்களை இந்த இருவரும்தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களை சிபிஐ அதிகாரிகள் ரகசியமாக நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து வாக்குமூலம் அளிக்கச் செய்துள்ளனர்.சுமார் 2 மணி நேரம் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பர்தா அணிந்து வந்த அந்தப் பெண் போலி முத்திரைத் தாள் மோடி மன்னன் தெல்கியின் தமிழகக் கூட்டாளியானநிஜாமுதீனின் மனைவியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களது விவரங்களைத் தர சிபிஐஅதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications