கட்டாய நன்கொடை: பள்ளி மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
நன்கொடை வாங்கி வரச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்ட ஏழை மாணவி, மனமுடைந்து தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நல்லிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி பிரியா. இவர்அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். கடந்த 29ம் தேதி மாணவி பிரியா தனது வீட்டில் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மாணவி பிரியாவிடம் நன்கொடைகேட்டு தொந்தரவு செய்ததாகவும், பணம் தர வசதியால்லாத அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதும்தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இன்று ஈரோடு மற்றும் அந்தியூரில் இந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது. பள்ளி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications