ஆபாச புகார்: நியூ படத்தை நீதிபதிகள் பார்த்தனர்
சென்னை:
ஆபாசங்கள் அடங்கியுள்ளதாகக் கூறி நியூ படத்தை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையின் ஒருகட்டமாக, அந்தப் படத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பார்த்தனர்.
எஸ்.ஜே.சூர்யா இயக்கியுள்ள நியூ படத்தில் இரட்டை அர்த்தங்கள் நிறைந்த வசனங்கள், பெண்களைஇழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் நிறைந்திருப்பாகக் கூறி அந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றுதிராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி ரிட் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் கற்பகவிநிாயகம், அசோக் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.விசாரணையின் ஒரு கட்டமாக இந்தப் படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள குட்லக் பிரிவியூ தியேட்டல் நியூ படத்தை நீதிபதிகள் இருவரும் பார்த்தனர்.அப்போது இரு தரப்பு வழக்கறிஞர்கள், தணிக்கை வாரிய அதிகாரிகள் ஆகியோரும் உடனிருந்தனர்.
நியூ படத்தில் கிரண், சூர்யா நடித்துள்ள புதிய பாடல் காட்சியை சேர்க்க ஏற்கனவே உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திரையுலகினர் பேரணி:
இதற்கிடையே திருட்டி விசிடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்த் திரையுலக சங்கங்களின் சார்பில்வரும் 16ம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படுகிறது. அனைத்து நடிகர், நடிகைகள், இயக்குநர்கள்,தயாரிப்பாளர்ளும் இதில் கலந்து கொள்கின்றனர். கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து மனுகொடுக்கவுள்ளனர். அன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதோடு, தமிழகம் முழுவதும் திரையரங்குகள்மூடப்படுகின்றன.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications