ஓ.பி தம்பி மீது புகார் சொன்ன வன அதிகாரி கைது
கும்பகோணம்:
தேக்கு மரங்களை வெட்டி கேரளாவுக்குக் கடத்துவதாக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா மீது புகார் கூறிய வனச்சரகர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜா மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. சமீபத்தில் தென் மாவட்டபோலீசாரையே கலக்கி வரும் ஒரு பெண்மணி விஷயத்திலும் இவரது பெயர் மறைமுகமாக அடிபடுகிறது.
இந் நிலையில் தேனி வனப் பகுதியில் தேக்கு மரங்களை வெட்டிக் கடத்துவதில் ஓ.பியின் தம்பி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும்,இதைத் தட்டிக் கேட்டதால் தன் மீது துறைரீயில் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்றும் நிருபர்களை அழைத்துப் பேட்டியளித்தார்ரேஞ்சர் ராஜேந்திரன்.
தன் மீது வனத்துறை எடுத்த நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத்தில் தடையாணை பெற்ற ராஜேந்திரன், மீண்டும் தேனி மாவட்ட வனரேஞ்சராகப் பதவியேற்க வந்தார். இதையடுத்து தேக்கு மரக் கடத்தல் விவகாரத்தில் ஓ.பியின் தம்பியை கைது செய்யும்நடவடிக்கைகளில் இறங்கினார்.
இந் நிலையில் அவர் மீது திடீரென தீண்டாமைத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவானது. தனக்குக் கீழ் பணிபுரிபவரை ஜாதியைச்சொல்லித் திட்டியதாக, அவரையே புகார் கொடுக்க வைத்துள்ளனர் போலீசார்.
இதையடுத்து கைதாவதில் இருந்து தப்ப ராஜேந்திரன் தலைமறைவானார். ஆனால், அவரது வீட்டை இரவு, பகல் என்றுபார்க்காமல் போலீசார் தட்டி மனைவியையும் தந்தையையும் தொல்லைப்படுத்தி வந்தனர்.
இந் நிலையில் கும்பகோணத்தில் தனிப்படை போலீசார் நேற்றிரவு ராஜேந்திரனைக் கைது செய்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications