பெரியாரை ஓரம்கட்டிய கிரிக்கெட்!
சென்னை:
தந்தை பெரியாரின் 126வது பிறந்த நாளையொட்டி சென்னை தொலைக்காட்சி நிலையம் தயாரித்திருந்த குறும்படம், கிரிக்கெட் போட்டிகாரணமாக ரத்து செய்யப்பட்டது.
திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியாரின் 126-வது பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.பெரியாரின் நினைவாக அவரது வாழ்க்கை வரலாற்றை அய்யா என்ற பெயரில் பத்திரிக்கையாளர் ஞானி குறும்படமாக தயாரித்துள்ளார்.
அந்தக் குறும் படத்தை 5 பகுதிகளாக சென்னைத் தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் இரண்டுபகுதிகள் செப்டம்பர் 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஒளிபரப்பானது. 3வது பகுதி நேற்று ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு அய்யா நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இங்கிலாந்தில்இலங்கைக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பானது.
இதற்கு திராவிடர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தி.க. பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறுகையில்,
தூர்தர்ஷனின் இந்தப் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் முன்பு, பெரியார் குறித்த நிகழ்ச்சி நேரமாற்றத்தையாவது நேயர்களுக்கு அறிவித்திருக்கலாம். இதுகுறித்து மத்திய செய்தி, ஒளிபரப்பு அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்வோம் என்றார்.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications