மன்மோகன் இங்கிலாந்து பயணம்
லண்டன்:
பிரதமர் மன்மோகன் சிங் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார்.
நாளை அவர் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரைச் சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து விவாதிக்கிறார். மேலும்சர்வதேச பிரச்சினைகள், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சட்ட விரோதமாக குடியேறும் இந்தியர்கள்குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.
இரு நாடுகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் வர்த்தக கமிட்டி ஒன்றை இரு தலைவர்களும்அறிமுகப்படுத்துகிறார்கள். பின்பு இருவரும் கூட்டாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கின்றனர்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியாவிற்கு இங்கிலாந்து தனது ஆதரவைத் தெரிவிக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் ஒரு நாள் தங்கும் மன்மோகன் சிங், அதன்பின் அமெரிக்கா செல்கிறார். வரும் செவ்வாய்க் கிழமைகாலை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்துப் பேசுகிறார்.
பின்பு, வரும் 23ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் மன்மோகன் சிங்உரையாற்றுகிறார். அங்கு பிரேசில், ஜப்பான், ஜெர்மனி, ஆப்கானிஸ்தான் நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப்பேசுகிறார்.
இந்தப் பயணத்தின் முக்கிய கட்டமாக பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பை வரும் 24ம் தேதி மன்மோகன் சிங்சந்தித்துப் பேசுகிறார். அப்போது காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும்பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
இந்தப் பயணத்தின்போது மன்மோகன் சிங்குடன் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், திட்டக் கமிஷன்துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா மற்றும் பாதுகாப்புத் துறை ஆலோசகர் தீக்ஷித் ஆகியோரும்செல்கின்றனர்.
டெல்லி விமான நிலையத்தில் அவர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள்உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக நிருபர்களிடம் பேசிய மன்மோகன் சிங்,
ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தைப் பெறுவதற்கு சர்வதேச நாடுகளின் ஆதரவைஅதிகரிக்க முயற்சிப்போம்.
இப்போது சர்வதேச நாடுகள் பலவும் தீவிரவாத சக்திகளின் பல்வேறு வகையான அச்சுறுத்தலுக்கு ஆளாகிவருகின்றன. இவற்றை எல்லாம் சமாளிக்கும் வகையில் ஐ.நா. சபை மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபையைமாற்றியமைக்க வேண்டும் என்று கூறினார்.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications