ஜெயலட்சுமியை சந்தித்ததே இல்லை: தளவாய்சுந்தரம்
சென்னை:
சிவகாசி ஜெயலட்சுமியை சந்தித்ததே இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம்கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அவதூறு கூறி பத்திரிக்கைகளின் முக்கிய செய்திகளிலும், அட்டைப்படக் கட்டுரைகளிலும் இடம் பெறத் துடிக்கும்ஜெயலட்சுமி என்னைப் பற்றி கூறியிருக்கும் செய்தி சிறிதும் உண்மை இல்லாதது.
எனது உதவியாளராக இருந்த காஜாவின் மைத்துனரான சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகானின் பணியிட மாறுதலுக்காகஎன்னை வந்து சந்தித்ததாகவும், நான் அந்தக் கோரிக்கையை மறுத்து விட்டதாகவும் ஜெயலட்சுமி கூறியிருக்கிறார்.அப்படி ஒரு சந்திப்பு நடை பெறவே இல்லை என்பதுதான் உண்மை. அவரது தகிடுதத்த அறிவிப்புகளில் இதுவும்ஒன்று.
அமைச்சர்களின் உதவியாளர்களை எனக்குத் தெரியும்; ஆனால் அமைச்சர்களை எனக்குத் தெரியாது என்று சிலநாட்களுக்கு முன்பு கூறிய ஜெயலட்சுமி இப்போது தெரியும் என்கிறார்.
கடந்த 40 நாட்களாக ஒவ்வொரு நாளும் பேட்டி கொடுத்து வரும் ஜெயலட்சுமி இதுவரை இது பற்றி பேசாததுஏன்? திடீரென இந்த நினைப்பு அவருக்கு தோன்றியது எப்படி? இதற்கு காரணம் அரசியல் எதிரிகள்நிர்பந்தம்தான்.
காவல்துறை முதல்வரின் துறை என்பதும், எந்த சிபாரிசும் அங்கு எடுபடாது என்பதும் அனைவரும் அறிந்தஉண்மை. தமிழக அரசு சிறப்போடு செயல்பட்டு வருவதை இந்தியப் பிரதமரே பாராட்டி உள்ளதைப்பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் ஜெயலட்சுமியைப் பயன்படுத்தி பொழுதுக்கொரு பொய்யை சொல்லிவருகின்றனர்.
ஜெயலட்சுமி கூறுகின்ற ஷாஜகானை நான் சந்தித்ததும் இல்லை, எதுவும் பேசியதுமில்லை. ஜெயலட்சுமியே நான்பார்த்தது இல்லை. இவரைப் பற்றி பத்திரிக்கைகளில் செய்திகள் வெளி வருவதற்கு முன் வரை, இவரைப் பற்றிநான் கேள்விப்பட்டது கூட இல்லை.
ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி என் மீது அபாண்டமான பொய்யை மனசாட்சியின் உறுத்தல் என்பதே இன்றிதுணிந்து சொல்லியிருக்கிறார் ஜெயலட்சுமி. இப்படியெல்லாம் அவதூறு பேச அவருக்கு ஆலோசனைகள்தருகின்றவர்கள் யார் என்பதை அனைவரும் அறிந்துதான் உள்ளனர்.
இதை நான் அவர் மீதும், அவரது பொய்ச் செய்திகளைத் தாங்கிய பேட்டியை வெளியிட்ட ஜூனியர் விகடன்பத்திரிகை மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications