அமெரிக்காவில் தவிக்கும் தமிழர்கள்: வைகோ கடிதம்
சென்னை:
அமெரிக்காவில் வீசிய கடும் புயலால் பாதிக்கப்பட்டு கிராண்ட் கோமன் தீவுப் பகுதியில் சிக்கித் தவிக்கும் 500தமிழர்களைக் காக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்காவுக்கு அருகே கரிபீய கடல் பகுதியில் உள்ளது கிராண்ட் கோமன் தீவு. இங்கு சமீபத்தில் வீசிய கடும்சூறாவளி மற்றும் புயலால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தீவில் 250 இந்தியர் குடும்பங்கள்வசிக்கின்றன. அவர்களில் 500 பேர் தமிழர்கள்.
புயல் காரணமாக வீடுகளை இழந்து இவர்கள் தவித்து வருகிறார்கள். உணவு, தண்ணீர் இல்லாமல் இவர்கள்அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த அவல நிலை குறித்து தமிழர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வைகோவுக்குத்தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ எழுதிய கடிதத்தில், பரிதவிக்கும் தமிழர்கள் மற்றும்இந்தியர்களைக் காக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். மேலும், அமெரிக்காவில் சுற்றுப்பயணம்செய்து வரும் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசி நிலையை விளக்கினார்.
கோமன் தீவில் வசித்து வரும் கனடா, ரஷியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் இதே புயலால்பாதிக்கப்பட்டபோது அந்த நாட்டு அரசாங்கங்கள் மீட்பு உதவியை வழங்கியதை சிங்குக்கு நினைவு கூர்ந்தவைகோ, அதே போல, மத்திய அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.
இதுகுறித்து ஆவண செய்வதாக தன்னிடம் பிரதமர் உறுதியளித்ததாக வைகோ தெரிவித்துள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications