இராக்கில் 10 பிணைக் கைதிகள் விடுப்பு
பாக்தாத்:
இராக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 10 பிணைக் கைதிகளை தீவிரவாதிகள் விடுவித்துள்ளனர்.
இராக்கிய தீவிரவாதிகளிடம் சிக்கும் பிணைக் கைதிகளில் பெரும்பாலானவர்கள் தலையை வெட்டிக்கொல்லப்படுவதே வழக்கம். இந்தியாவைச் சேர்ந்த 3 பேரையும், எகிப்து, கென்ய நாட்டினர் 4 பேரையும் தான்முதன்முதலில் தீவிரவாதிகள் உயிரோடு விடுவித்தனர்.
இந் நிலையில் இத்தாலியைச் சேர்ந்த சமூக சேவை அமைப்பின் உறுப்பினர்களான இரு பெண்களையும்,அவர்களுடன் கடத்திச் செல்லப்பட்ட இந்த அமைப்பில் பணியாற்றிய 2 இராக்கியர்களையும் தீவிரவாதிகள்விடுவித்துள்ளனர். இவர்கள் கடந்த 7ம் தேதி பாக்தாதில் இருந்து கடத்திச் செல்லப்பட்டனர்.
அதே போல எகிப்து நாட்டின் ஒரஸ்காம் தொலைத் தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேரையும் மேலும்ஒருவரையும் தீவிரவாதிகள் விடுவித்துள்ளனர். இவர்கள் கடந்த வாரத்தில் கடத்தப்பட்டனர்.
இங்கிலாந்தில் பிளவு: பிளேர்
இதற்கிடையே இங்கிலாந்தின் பிரிஹ்டன் நகரில் தனது தொழிலாளர் கட்சியின் மாநாட்டில் பேசிய அந் நாட்டுப்பிரதமர் டோனி பிளேர்,
இராக் போரினால் இங்கிலாந்து மக்களிடையே பெரும் பிளவு ஏற்பட்டுவிட்டது. இந்தப் போரை பெரும்பாலானஇங்கிலாந்து மக்கள் ஆதரிக்கவில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால், இராக்கில் ஜனநாயகத்தைக்கொண்டு வர போரைத் தவிர வேறு வழியில்லை.
இதனால் இந்தப் போருக்காக நான் வருத்தம் தெரிவிக்கத் தயாராகஇல்லை என்றார்.
அவர் பேச ஆரம்பித்தவுடனேயே, மாநாட்டிற்கு வந்திருந்த பலரும் எழுந்து, உங்கள் கைகளில் இராக்கியமக்களின் ரத்தம் ஒட்டியிருக்கிறது என்று கோஷமிட்டனர்.
அவர்களுக்கு பதிலளித்த பிளேர், நீங்கள் உங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கலாம். ஜனநாயக நாட்டில்வசிக்கிறீர்கள், இதனால் ஒரு பிரதமருக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தை அனுபவிக்கிறீர்கள். இந்தச்சுதந்திரத்தை இராக்கிய மக்களுக்கும் கிடைக்கச் செய்யவே போர் தொடுத்தோம் என்றார்.
பிரிட்டிஷ் பிணைக் கைதி: அராபத் முயற்சி
இதற்கிடையே இராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த கென்னத் பிக்லியைவிடுவிக்கும் முயற்சிகளில் பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் முயற்சி மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவருடன் கடத்தப்பட்ட இரு அமெரிக்கர்களை தீவிரவாதிகள் கொலை செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications