சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு: வைகோ ஆதரவு
சென்னை:
சிறுபான்மையின மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்திநிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலர் நல்லகண்ணு ஆகியோர் கூறியுள்ளனர்.
இந்திய தேசிய லீக் சார்பில் சென்னை மண்ணடியில் நடைபெற்ற காயிதே மில்லத், அப்துல் லத்தீப் ஆகியோரதுபிறந்தநாள் விழா நடைபெற்றது.
அதில் வைகோ, நல்லகண்ணு, திமுக அமைப்புச் செயலர் விடுதலை விரும்பி, விடுதலைச் சிறுத்தைகள்பொதுச்செயலர் திருமாவளவன், காங்கிரஸ் எம்.பி. ஜே.எம். ஹாரூண், தேசிய லீக் மாநிலத் தலைவர் எம். பஷீர்அஹமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேசிய லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் இப்ராஹிம் சுலைமான் சேட் பேசுகையில், மதவாத சக்தியான பாஜகதோற்கடிக்கப்பட்டதோடு நமது கடமை முடிந்து விட்டதாகக் கருதக் கூடாது. சிறுபான்மை மக்களும் ஆட்சிஅதிகாரத்தில் பங்கேற்பவர்களாக மாற வேண்டும். அதற்கு மதசார்பில்லாத சக்திகள் உதவ வேண்டும் என்றார்.
பின்னர் வைகோ பேசுகையில்,
மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புகளில் சிறுபான்மையின மக்களுக்குப் போதிய இட ஒதுக்கீடு இல்லை.பின்தங்கிய நிலையில் இருக்கும் முஸ்லிம்கள் உள்பட அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது என்றார்.
இதே கருத்தை நல்லகண்ணுவும் தெரிவித்தார். விழாவில், வைகோவுக்கு காயிதே மில்லத் நினைவு தங்கப்பதக்கத்தை சுலைமான் சேட் வழங்கினார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications