For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலட்சுமி: தோண்டி எடுக்கிறது சிபிஐ- சிக்கப் போகும் விவிஐபி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

கடந்த இரண்டே நாட்களில் ஜெயலட்சுமி விவகாரம் தொடர்பாக தாங்கள் திரட்டிய ஏராளமான தகவல்கள் அடங்கிய முதல் விசாரணைஅறிக்கையை சிபிஐ அதிகாரிகள் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

Jayalakshmiசிபிஐ கூடுதல் எஸ்.பி.சிவாஜி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையிலான குழுவினர் கடந்த 2 நாட்களாக மதுரையில் விசாரணைநடத்தினர். சிவகாசிக்கும் ஒரு குழு சென்று அங்கும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணைகளில் ஜெயலட்சுமி தொடர்பான பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

மலைச்சாமியின் லஞ்சமும் கந்துவட்டியும்:

இன்ஸ்பெக்டர் மலைச்சாமி லஞ்சம் வாங்கிக் குவித்த லட்சக்கணக்கான பணத்தை கந்துவட்டிக்கு விட்டு வந்துள்ளார். ஜெயலட்சுமிமூலமாகத் தான் பலருக்கும் கடன் கொடுத்து, வாங்கி வந்துள்ளார்.

திருமங்கலத்தைச் சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர் ஒருவருக்கு மட்டும் ஜெயலட்சுமி மூலம் மலைச்சாமி கொடுத்த கந்து வட்டிக் கடன் ரூ. 3லட்சம்.

போனுன்டு பில் கட்டியதில்லை...

உடுமலைப்பேட்டை, ஈரோடு ஆகிய ஊர்களில் போலீஸ் அதிகாரிகளுடன் ஜெயலட்சுமி வசித்தபோது தனியார் தொலைபேசிநிறுவனங்கள் மூலம் ஜெயலட்சுமிக்கு தொலைபேசி இணைப்புகளை வாங்கித் தந்துள்ளனர் போலீசார்.

இந்த தொலைபேசிகளுக்குரிய கட்டணத் தொகையான ரூ. 1.5 லட்சத்தை ஜெயலட்சுமி கட்டவில்லை. இதனால் தொலைபேசி இணைப்புகள்துண்டிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீஸ் தொடர்புகள் இருந்ததால் ஜெயலட்சுமி மீது தொலைபேசி நிறுவனங்கள்நடவடிக்கையில் இறங்க யோசித்து வந்துள்ளன.

வங்கியில் இளங்கோவனுக்கு மனைவி..

மதுரை டவுன்ஹால் ரோடு கனரா வங்கியில் கணக்கை தொடங்க ஜெயலட்சுமிக்கு இன்ட்ரோடக்ஷன் கையெழுத்து போட்டவர்இன்ஸ்பெக்டர் இளங்கோவன். மனைவி என்றே குறிப்பிட்டதோடு, தன் போலீஸ் குவாட்டர்ஸ் முகவரியையே தந்துள்ளார்.

அதே போல திருநகர் பேங்க் ஆப் இந்தியாவிலும் ஜெயலட்சுமி பெயரில் ஒரு கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரு கணக்குகளிலும்புரண்ட தொகை ரூ. 45 லட்சம். போலீஸ் அதிகாரிகளின் லஞ்ம் தான் இங்கு ஜெயலட்சுமியின் காசாக சுற்றி வந்திருப்பதாக சிபிஐ கருதுகிறது.

இந்தத் தகவல்களை மடமடவென திரட்டிவிட்ட சிபிஐ, மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு அறிக்கையையும் தாக்கல்செய்துவிட்டது. ஜெயலட்சுமி வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்படும் முதல் விசாரணை அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

8 காக்கிகள் மீது கற்பழிப்பு வழக்கு:

இந்த அறிக்கையில் கூடுதல் எஸ்.பி. ராஜசேகர், எஸ்.பி. சொக்கலிங்கம், இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மலைச்சாமி, சுந்தரவடிவேலு,சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாஜகான், மோகன்ராஜ், ஏட்டு கண்ணன் ஆகியோர் மீது கற்பழிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்சிபிஐ தெரிவித்துள்ளது.

ஈரோடு.. உடுமைல.. கோவை...

ஜெயலட்சுமியின் தொலைபேசி தொடர்புகள் குறித்து அறிவதற்காக ஈரோடு, உடுமலைப்பேட்டை, கோவை ஆகிய நகரங்களுக்கும் சிபிஐஅதிகாரிகள் செல்வார்கள் எனத் தெரிகிறது.

தனியார் தொலைபேசி நிறுவனங்களிடம் இணைப்பு பெற்ற அவர் ஒரு முறை கூட பில் கட்டியதில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்டதொலைபேசி நிறுவனங்கள் பலமுறை கடிதம் எழுதியும், தனது போலீஸ் பின்பலத்தின் காரணமாக ஜெயலட்சுமி அதை கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாகவும் சிபிஐ விசாரிக்கும்.

Jayalakshmiமேலும், ஜெயலட்சுமியின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டவர்கள் யார், யார் என்ற தகவலையும் சிபிஐ திரட்டும்.

விவிஐபியுடன் குஜால்...

மேலும் ஈரோடு நெசவாளர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் முக்கியப் புள்ளி ஒருவருடன் ஜெயலட்சுமி சில நாட்கள் தங்கியிருந்த விவரமும்சிபிஐக்குக் கிடைத்துள்ளது. அந்த நபரை விரைவில் வெளியுலகுக்குக் காட்டவுள்ள சிபிஐ அது தொடர்பாக 3 சாட்சிகளை சேகரித்துள்ளது.

அந்தத் தெருவில் இளநீர் விற்கும் கணேசன், 2 ஹோட்டல் உமையாளர்களான பெருமாள், ஜெயராமன் ஆகியோரே அந்த சாட்சிகள்.அவர்கள் மூலமாக ஜெயலட்சுமியுடன் தங்கிய முக்கியப் புள்ளி குறித்த ஆதாரம் வலுவடைந்திருப்பதாக சிபிஐ தரப்பில் கூறுகின்றனர்.

விரைவில் இந்த விவிஐபி வெளியுலகுக்கு தோல் உரித்துக் காட்டப்படுவார்.

இன்னொரு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்:

இதற்கிடையே ஜெயலட்சுமியுடன் செக்ஸ் தொடர்பு வைத்திருந்த பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்சுந்தரவடிவேலை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் தான் இவரை இடமாற்றம் செய்தது அரசு.

ஆனால், இவரைச் சுற்றி சிபிஐயின் வலை இறுகுவது உறுதியாகிவிட்டதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X