கர்நாடகம்: பிற மொழி சினிமாவை தடுக்க சட்டம்?
டெல்லி & பெங்களூர்:
கர்நாடகத்தில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளதையடுத்து, இந்தத் தடையை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என மாநில அரசைவலியுறுத்தப் போவதாக கன்னட சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
கன்னடம் அல்லாத பிற மொழித் திரைப்படங்களை 7 வாரங்கள் கழித்தே கர்நாடகத்தில் திரையிட வேண்டும் என்று கர்நாடக திரைப்படவர்த்தக சபை உத்தரவிட, இந்தத் தடையை அப்படியே அமலாக்க முன் வந்தது கர்நாடக அரசு.
இதை எதிர்த்து ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கர்நாடகத்துக்கு கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
ஜெமினி பிலிம்ஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் கர்நாடகத்தின் ஒருதலைப்பட்சமான செயல்கள் புட்டுப் புட்டு வைக்கப்பட்டுள்ளன. அதன்முழு விவரம்:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் கன்னடத் திரையுலகம் நடந்து கொண்டுள்ளது. கன்னடம் தவிர்த்து பிற மொழிபேசுபவர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் கர்நாட திரையுலகினர் செயல்படுகின்றனர்.
மேலும் கர்நாடகத்தைப் போலவே ஆந்திரா, கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களும் பிற மொழிப் படங்களுக்குத் தடை விதிக்கஆரம்பித்தால் நாட்டின் ஒற்றுமையே கேள்விக்குறியாகி விடும். கர்நாடக திரையுலகினரின் இச் செயலால் பிரிவினைவாதமும்பிராந்தியவாதமும் தான் தலை தூக்கும்.
மொழியின் பெயரால் மக்கள் மோதிக் கொள்ளும் சூழ்நிலையை கர்நாடக சினிமா துறையினர் உருவாக்க முயல்கின்றனர். எனவே பிறமொழி சினிமாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கூறப்படுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சந்தோஷ் ஹெக்டே, எஸ்.பி.சின்ஹா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் 7வார கட்டுப்பாட்டுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு கர்நாடகம், கேரளம், ஆந்திரம் மற்றும் தமிழக அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து கர்நாடக திரைப்பட வர்த்க சபையின் தலைவர் கங்கராஜு கூறுகையில்,
மாநில அரசு இந்த விஷயத்தில் சம்பந்தப்படவே இல்லை. அப்படி இருக்கையில், மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் எப்படி நோட்டீஸ்அனுப்ப முடியும்? உச்சநீதிமன்ற உத்தரவு எங்களது கைக்கு வந்தவுடன் இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் பேசி வரும் 18ம் தேதி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கன்னட திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பசந்த்குமார் பாட்டீல் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையைநீக்குவது குறித்து சட்ட நிபுணர்களுடன் பேசி வருகிறோம். பிற மொழி சினிமாவுக்கு 7 வார காலத் தடையை அதிகாரப்பூர்வமாக்கும்வகையில் சட்டம் கொண்டு வருமாறு மாநில அரசிடம் வலியுறுத்துவோம் என்றார்.


Click it and Unblock the Notifications
