விடுதலைப் புலிகளுக்கு எதிராக புதிய கூட்டணி!
கொழும்பு & சென்னை:
கருணாவின் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும், ஞானசேகரன் என்பவரது தலைமையிலான ஈழ தேசிய ஜனநாயக விடுதலைமுன்னணியும் இணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என இக் கூட்டணிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கருணாவின் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை முறைப்படி பதிவு செய்ய, தேர்தல் சட்ட விதிமுறைகளைக் காரணம் காட்டிஇலங்கை தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.
இந் நிலையில் தேர்தல் ஆணைய விதிமுறைகளிலிருந்து தப்பி தனது கட்சிக்கு அங்கீகாரம் பெறும் முயற்சிகளில் கருணா இறங்கியுள்ளார்.அதன் ஒரு பகுதியாகவே, ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி என்றகட்சியுடன் இணைந்து, புதிய அரசியல் கூட்டணியை கருணா உருவாக்கியுள்ளார்.
ஞானசேகரன் என்பவரது தலைமையில் இந்த ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி இயங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications