செயிண்ட் கிட்ஸ் மோசடி: சந்திரா சுவாமி விடுதலை
டெல்லி:
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மகனுக்கு வெளிநாட்டில் ரகசிய வங்கிக் கணக்கு இருப்பதாகக் கூறி அவருக்குஎதிராக போலி ஆவணங்கைள உருவாக்கிய வழக்கில் இருந்து சந்திரா சுவாமி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.போதிய சாட்சிகள் இல்லாததால் அவர் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜிவ் காந்திக்கு எதிராக வி.பி.சிங் போபர்ஸ் விவகாரத்தை கிளப்பியதையடுத்து அவரைப் பழி வாங்கும்நடவடிக்கையில் இறங்கினார் அப்போதைய காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த நரசிம்மராவ்.
தனது நண்பரான சந்திரா சுவாமியின் உதவியுடன் இத் திட்டத்தை நரசிம்மராவ் செயல்படுத்தினார். வி.பி.சிங்கின்மகன் அஜேய சிங், செயிண்ட் கிட்ஸ் தீவுகளில் உள்ள வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மறைத்துவைத்துள்ளதாக ஒரு பொய்யான செய்தியை சந்திரா சுவாமி அண்ட் கோ பரப்பியது.
அதற்கு ஆதாரமாக சில ஆவணங்களையும் வெளியிட்டனர். செயிண்ட் கிட்ஸ் தீவுகளில் உள்ள பர்ட் டிரஸ்ட்கார்பரேசன் வங்கியில் ஒரு ரகசிய கணக்கைத் தொடங்கி, அதில் தனது மகன் மூலமாக, வி.பி.சிங் 12 மில்லியன்அமெரிக்க டாலர்களை பதுக்கி வைத்திருப்பதாக அந்த ஆவணங்கள் தெரிவித்தனர். இது நடந்தது 1989ம்ஆண்டில்.
இதையடுத்து அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங், இது குறித்து உடனே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.சிபிஐ விசாரணையில் அந்த ஆவணங்கள் போலி என்று தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அஜேய சிங் பணம் ஏதும் முடக்கி வைக்கவில்லை என்றும் தெரியவந்தது.
இதையடுத்து போலி ஆவணங்களைத் தயாரித்தாக சந்திராசுவாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சந்திரா சுவாமி மீது மோசடி ஆவணங்கள் தயாரித்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில்இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
மோசடி ஆவண வழக்கில் சந்திரா சுவாமியை தொடர்புபடுத்த போதிய ஆதாரம் இல்லை என்று கூறி டெல்லி சிறப்புநீதிமன்ற நீதிபதி தினேஷ் தயாள் இன்று அவரை விடுதலை செய்தார்.
இந்த வழக்கில் நரசிம்மராவ் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுவிட்டார். நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் இந்தவழக்கு விசாரணைக்கு பல வகைகளிலும் சிபிஐக்கு முட்டுக் கட்டை போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று தீர்ப்பையொட்டி நீதிமன்றம் வந்திருந்த சந்திரா சுவாமி பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், இந்தத் தீர்ப்புராஜிவ் காந்திக்கும் எனக்கும் கிடைத்த வெற்றி. இறுதியில் நீதி வென்றுள்ளது என்றார்.
அஜேய சிங் அமெரிக்காவில் முதலீட்டு நிறுவனம் ஒன்றில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications