கார்கில் ஆயுத ஊழல்: அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி:
பா.ஜ.க. ஆட்சியில் கார்கில் யுத்தத்தின்போது ஆயுதங்கள் வாங்கியதில் பல கோடி அளவுக்கு முறைகேடுகள்நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டு மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கார்கில் யுத்தத்தின்போதும், யுத்தத்திற்குப் பிறகும் ஆயுதங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டன. போரக்ை காரணம்காட்டி பல விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. இதில் பெருமளவில் மோசடி நடந்துள்ளதாக நாட்டின்தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியான கம்ப்ரோலர் ஜெனரலும், மத்திய விஜிலென்ஸ் கமிஷனும் குற்றம்சாட்டின.
ஆனால், இது குறித்து அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசோ, அரசோ எந்த விளக்கமும்அளிக்கவில்லை.
இப்போது மத்தியில் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு, இந்த ஆயுத பேர ஊழல் குறித்து விசாரணை நடத்தஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் இதுவரை என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்த அபிடவிட் தாக்கல் செய்யுமாறு மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போர் விமானங்கள் வாங்க இடைத் தரகர்?
இதற்கிடையே பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் விமானத் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 10 மிராஜ்-2000 ரகவிமானங்களை இந்தியா வாங்கியதில் இடைத் தரகராக ஒரு நிறுவனம் செயல்பட்டு, கொள்ளை லாபம் அடித்ததாகபுகார் எழுந்துள்ளது.
பனாமாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இடைத்தரகராக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷெல் கிருஷ்ணமூர்த்தி மறுத்தார். இதில் இடைத் தரகர்கள் யாரும் ஈடுபடுத்தப்படவில்லைஎன்றார்.
-
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications