தமிழ் தீவிரவாதிகளால் வீழ்ந்த வீரப்பன்: நடராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் தீவிரவாதிகளுடன் கொண்ட தொடர்பு காரணமாகவே வீரப்பன் வீழ்ந்தான் என்று சென்னை போலீஸ்கமிஷனரும், தமிழக அதிரடிப்படையின் முன்னாள் தலைவருமான நடராஜ் கூறினார்.

சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற நடராஜ், அங்கு அதிரடிப்படைவீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்தி விட்டு சென்னை திரும்பினார். சென்னையில் நிருபர்களிடம் இன்று அவர்கூறியதாவது:

வீரப்பனை உயிருடன் பிடித்தாலோ, சுட்டுக் கொன்றாலோ குடும்பத்துடன் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதாகபண்ணாரி அம்மன் கோவிலில் வேண்டியிருந்தோன். அதன்படி இப்போது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளேன்.

அதிரடிப்படை முகாம்களுக்கு சென்று வீரர்களை வாழ்த்தி விட்டு வந்தேன். தட்டக்கரையில் அதிரடிப்படையினரின்நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்தேன். உளவுப் பிரிவு மூலம் கிராம மக்களின் குறைகளை தீர்க்கநடவடிக்கை எடுத்தோம்.

அதிகாரிகள் செல்ல பயப்பட்ட கிராமங்களுக்கு நாங்களே முன் வந்து மக்களுக்கு உதவி செய்ததால் வீரப்பன்பற்றிய முக்கியமான சில தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. ஒவ்வொரு கிராமத்திலும் வாரம் ஒரு மருத்துவ முகாம்நடத்தினோம். அதிரடிப்படைக்கு உதவும் எண்ணத்தை மக்களிடம் உருவாக்கினோம்.

தமிழ் தீவிரவாதிகள் வீரப்பனை சந்திக்கிறார்கள் என்ற தகவல் இப்படித்தான் கிடைத்தது. நாங்கள் அதிரடிப்படையினரை தீவிரவாதிகளாக வீரப்பனிடம் அனுப்பினோம்.

நான் அதிரடிப்படை தலைவராக இருக்கும்போது வீரப்பனை பிடிக்கவில்லையே என்ற வருத்தம் இல்லை.யாராவது ஒருவர் பிடிக்கத்தான் வேண்டும். எனது காலத்தில் பலமான அடித்தளம் அமைக்கப்பட்டது. அதற்கானபலன் இப்போது கிடைத்துள்ளது.

ராஜ்குமார் விவகாரத்தில் வீரப்பனுக்கு நிறைய பணம் கைமாறி இருந்தது உண்மைதான். அதை அவன் பலரிடம்கொடுத்து வைத்திருந்தான். நான் அதிரடிப் படை தலைவராக இருந்தபோது அவனது ஆட்களிடம் இருந்து ரூ. 50லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

காட்டுக்குள் தற்போது பணம் இருக்கிறதா என்பதை சி.பி.சி.ஐ.டி போலீஸாரும், அதிரடிப் படையினரும்விசாரிப்பார்கள். காட்டுக்குள் யார் வேண்டுமானாலும் சென்று வர அனுமதி இல்லை. அதற்கான வனத்துறைசட்டங்கள் உள்ளன. வீரப்பன் பணத்தை யார் வைத்து இருந்தாலும் அது சட்டப்படி குற்றம்தான். அவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நடராஜ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+