ஜெயலட்சுமி: சிபிஐயிடம் போலீஸ் குடும்பங்கள் புகார்
மதுரை:
ஜெயலட்சுமியின் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினர் சிபிஐஅதிகாரிகளிடம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
ஜெயலட்சுமி, அவரது தந்தை அழகிரிசாமி, சகோதரர் சீனிவாசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ள சிபிஐஅதிகாரிகள் அடுத்த கட்டமாக ஜெயலட்சுமி குற்றம் சாட்டியுள்ள காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தமுடிவு செய்துள்ளனர்.
இந் நிலையில் ஜெயலட்சுமி விவகாரத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள சப்--இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டுகண்ணன், நகைக்கடை அதிபர் முருகவேல் ஆகியோரின் குடும்பத்தினர் தனித்தனியாக ஜெயலட்சுமியின்மோசடிகள் குறித்து சிபிஐயிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
அதேபோல் இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மலைச்சாமி ஆகியோரது குடும்பத்தினரும் சிபிஐயிடம் புகார்மனுக்களை கொடுக்க இருப்பதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே சிபிஐ அதிகாரிகளிடம் சங்கரன்கோவிலை சேர்ந்த நூல் மில் அதிபர் பிரகாஷ் மூர்த்தி என்பவர்ஜெயலட்சுமி குடும்பத்தினர் மீது மோசடி புகார் செய்தார். அவரது புகாரைப் பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள்பின்னர் விசாரணைக்கு அழைப்பதாக தெரிவித்தனர்.
அதேபோல் இன்று திருநெல்வேலியைச் சேர்ந்த 3 பேர் ஜெயலட்சுமி மீது புகார் கொடுக்க மனுவுடன் சிபிஐஅலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் அவர்களது புகாரை சிபிஐ அதிகாரிகள் வாங்கவில்லை. பெயர் மற்றும்முகவரியை மட்டும் குறித்துக் கொண்டு அனுப்பி விட்டதாகத் தெரிகிறது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications