மகராஷ்டிரா: மீண்டும் முதல்வராகிறார் ஷிண்டே
மும்பை: மகராஷ்டிரா மாநில முதல்வர் பதவியை காங்கிரசுக்கே விட்டுக் கொடுக்க சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் முன்வந்துவிட்டது. இதையடுத்து மீண்டும் சுஷில்குமார் ஷிண்டே முதல்வராவார் என்று தெரிகிறது.
சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. யார் முதல்வர் பதவியைவகிப்பது என்பதில் இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததால், ஆட்சியமைப்பதில் கடந்த 12நாட்களாக இழுபறி நீடித்தது.
இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஆலோசனையின் பேரில் சரத்பவாரை காங்கிரஸ்தலைவர்கள் மார்க்கெரட் ஆல்வா, அகமதுபடேல் ஆகியோர் சந்தித்து பேச்சு நடத்தினார்கள். இந்தபேச்சுவார்த்தைக்கு பின்னர் பவார் தொலைபேசியில் சோனியாவுடன் பேசினார். அதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.
முதல்வர் பதவியை மீண்டும் காங்கிரசுக்கே விட்டுத் தர தேசியவாத காங்கிரஸ் முன் வந்துவிட்டது. துணை முதல்வர்பொறுப்பை தேசியவாத காங்கிரஸ் கட்சி ஏற்கிறது.
அதோடு மத்திய அரசில் இரண்டு காபினட் அமைச்சர் பதவியும், 1 இணை அமைச்சர் பதவியும் தேசியவாதகாங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக வழங்கப்படும் என்று பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில்நாளை நடைபெறுகிறது. இதில் புதிய முதல்வர் தேர்ந்து எடுக்கப்படுகிறார். முன்னதாக இரு கட்சிகள் தனித்தனியேகூட்டம் நடத்துகின்றன.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சுசில்குமார் ஷிண்டே மீண்டும் முதல்வராக தேர்ந்து எடுக்கப்படுவார் என்றுதெரிகிறது. முதல்வர் பதவிக்கு விலாஸ்ராவ் தேஷ்முக் பெயர் அடிப்பட்டாலும், ஷிண்டேக்குத்தான் அதிக வாய்ப்புஉள்ளதாகக் கூறப்படுகிறது.
துணை முதல்-வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயசிங் மொகிதி பட்டீல் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
சுசில்குமார் ஷிண்டே நாளை மறுநாள் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications