சென்னை மாநகராட்சி: திமுக கவுன்சிலர்கள் வெளியேற்றம்
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் திமுகதலைவர் சி.வி.மலையன் எழுந்து, கடந்த 3 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியால் நிறைவேற்றப்படாததிட்டங்களை பட்டியலிட்டு, இதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்வதாக கூறி விட்டுவெளியேறினார்.
பின்னர் துணை மேயர் கராத்தே தியாகராஜன் பேசுகையில், திமுக தலைவர் மலையன் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு உத்ததரவிட்டார். இதைக் கேட்டதும் திமுக உறுப்பினர்கள் மீண்டும் சபைக்குள் வந்தனர்.
கராத்தே தியாகராஜனின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வாக்குவாதம் செய்தனர். அவர்களை எதிர்த்துஅதிமுக உறுப்பினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் கடுமையாக வாதிட்டதால் அங்குஎன்ன பேசப்படுகிறது என்பதே புரியவில்லை.
இந் நிலையில் சில உறுப்பினர்கள் கைகலப்பில் இறங்கவும் முயன்றனர். இதனால், திமுக உறுப்பினர்களைசபையிலிருந்து வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு கராத்தே தியாகராஜன் உத்தரவிட்டார். இதையடுத்துமலையன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்களை காவலர்கள் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே கொண்டு வந்துவிட்டனர்.
இந் நிலையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து, காமராஜர் உருவம் பதித்த நாணயங்களை வெளியிட்ட மத்தியஅரசைப் பாராட்டி சபையில் தீர்மானம் கொண்டு வராததைக் கண்டித்து வெளிநடப்புச் செய்வதாக அறிவித்துவிட்டு வெளியேறினர்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications