விஜயக்குமார் பதவி உயர்வில் சிக்கல்
சென்னை:
தமிழக அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்குபரிந்துரை செய்யுமாறு தமிழக அரசுக்கு முன்னாள் டிஜிபி தேவாரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீரப்பனை வீழ்த்திய அதிரடிப் படையினருக்கு ஒரு படி பதவி உயர்வு, ரூ. 3 லட்சம் ரொக்கம், இலவச வீட்டு மனைஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதில் பதவி உயர்வு என்ற அறிவிப்பு தமிழக அரசின் உள்துறை அதிகாரிகளுக்கு பெரும் சங்கடத்தைஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு என்பது அவர்களது பணி மூப்பைப் பொருத்தே அமையும். ஆனால்,தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள பதவி உயர்வு, அந்த அடிப்படையில் அமையவில்லை.
இதனால் இந்த உத்தரவை அமலாக்கும் முன் மத்திய உள்துறையின் அனுமதியைப் பெற வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎஸ் அதிகாரியான கூடுதல் டிஜிபி விஜயக்குமார், காவல்துறைக் கண்காணிப்பாளர்செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் மத்திய அரசின் சிறப்பு அனுமதியைப் பெற, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமேவிஜய்குமார் தொலைபேசியில் பேசியதாகத் தெரிகிறது.
ராஜிவ் மற்றும் சோனியாவின் உதவியாளரான ஜார்ஜும் விஜய்குமாருக்கும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்அவர்களுக்குள் நல்ல நட்பு உண்டு. மேலும் ராஜீவின் கருப்புப் பூனைப் படையில் பணியாற்றியவர் விஜய்குமார்.
இந்த லிங்கைப் பயன்படுத்தி ஜார்ஜ் மூலமாக விஜய்குமார் பேசியதாகவும், ஆனால் சோனியா இதில் உறுதிமொழிஎதையும் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. உள்துறைக்கு உங்கள் அரசை கடிதம் அனுப்பச் சொல்லுங்கள் என்றுமட்டும் சோனியா கூறியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் முன்னாள் டிஜிபி தேவாரத்திடம் தமிழக அரசு ஆலோசனை கேட்டுள்ளது. தேவாரமும் சிலஆலோசனைகளைக் கொடுத்துள்ளார். ஒட்டுமொத்த பதவி உயர்வு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றுஅவரும் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் விஜயகுமாருக்கு பத்மஸ் ஸ்ரீ விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசுபந்துரைக்கலாம் என முதல்வர் ஜெயலலிதாவிடம் தேவாரம் யோசனை தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்போது கூடுதல் டிஜிபியாக உள்ள விஜய்குமாருக்கு பதவி உயர்வு தரப்பட்டால் டிஜிபி அந்தஸ்து தரப்படவேண்டும். இது அவரை விட பணி மூப்பு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும் என்றுதமிழக உள்துறை கருதுகிறது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications