தரம்சிங்குடன் ஜெ. பேச இளங்கோவன் யோசனை
நாகர்கோவில்:
பரம்பிக்குளம்- ஆழியாறு பிரச்சினையைத் தீர்க்க கேரள முதல்வருடன் பேச்சு நடத்தியது போல், காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண கர்நாடக முதல்வர் தரம்சிங்குடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சு நடத்த வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் இளங்கோவன் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னையில் மோட்டார் உதிரிபாகங்கள் செய்வதற்கான ஒருங்கிணைப்பு தொழில் பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதிஅளித்துள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ.50 கோடி செலவிட உள்ளது.
15 நாள்களுக்கு ஒருமுறை, சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வதால் நாமும் விலைகளை மாற்றிஅமைக்கும் சூழ்நிலை உள்ளது.
நான்குநேரியில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. இதற்கு மத்திய அரசுஉதவி செய்யும்.
தமிழக வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்க முதல்வர் அழைப்பு விடுத்தால் அவரைச் சந்திக்கத் தயாராக உள்ளேன்.
மழை பெய்வதற்கு முன்பே மத்திய குழுவினரை அழைத்து வந்து வறட்சிப் பகுதிகளைப் பார்வையிட்டு இருந்தால் தமிழகத்திற்குகூடுதலாக மத்திய அரசின் வறட்சி நிவாரண நிதி கிடைத்து இருக்கும்.
பரம்பிக்குளம்-- ஆழியாறு நீர் பகிர்வுப் பிரச்சினை தொடர்பாக கேரள முதல்வருடன் ஜெயலலிதா பேச்சு நடத்தியதுவரவேற்கத்தக்கது. இதுபோன்று காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண கர்நாடக, புதுவை முதல்வர்களுடன் பேச வேண்டும்என்றார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications