பெங்களூர்... ஹைதராபாத்: ரகசியமாய் நடந்த கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதை மிக, மிக ரகசியமாக வைத்திருந்தது தமிழக காவல்துறை.

விஷயம் லீக் ஆனால் சங்கராச்சாரியார் சட்ட உதவியுடன் தப்பிவிடக் கூடும் என்பதால் உச்சபட்ச ரகசியம்காக்கப்பட்டது. அவரைக் கைது செய்ய வருவதை அவருக்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசாருக்குக் கூட சிறப்பு டீம் தெரிவிக்கவில்லை.

இதனால், அவர் எங்கிருக்கிறார் என்பதில் சிறிய குழப்பம் நிலவியது. காஞ்சி மடத்தில் அவர் இல்லை என்பதுஉறுதியானாலும், பெங்களூரில் உள்ளாரா அல்லது ஆந்திராவில் இருக்கிறாரா என்பதில் குழப்பம் எழுந்தது.

இதையடுத்து ஆந்திராவுக்கு ஒரு டீம் செல்வது, பெங்களூருக்கு ஒரு டீம் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

முதல் படை தமிழக கூடுதல் டிஜிபி கே.வி.எஸ். மூர்த்தி தலைமையில் சிறப்பு விமானத்தில் பெங்களூர் விரைந்தது.இரண்டாவது படை எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் ஹைதராபாத் விரைந்தது.

சங்கராச்சாரியாரைக் கைது செய்ய தமிழக போலீஸ் சிறப்புப் படை வந்து கொண்டிருப்பதை ஆந்திரா மற்றும்கர்நாடக டிஜிபிக்களிடம் தொலைபேசியில் தெரிவித்தார் தமிழக போலீஸ் டிஜிபி கோவிந்த்.

இதையடுத்து இந்தக் கைதுக்கு தமிழக போலீசுக்கு உதவ ஆந்திர போலீசாரும் கர்நாடக போலீசாரும் தயாராகினர்.ஆனால், தங்கள் தரப்பில் விசாரித்துவிட்டு சங்கராச்சாரியார் கர்நாடகத்தில் இல்லை என தகவல் தந்தனர் அம்மாநில போலீசார்.

அதே நேரத்தில் சங்கராச்சாரியார் ஆந்திராவில் தான் இருக்கிறார் என்பதை அம் மாநில போலீசார் உறுதி செய்தனர்.இதனால் அவரை எஸ்.பி. இளங்கோவன் தலைமையிலான படை கைது செய்யத் தயாரானது.

கர்நாடகம் சென்ற கே.வி.எஸ்.மூர்த்தி தலைமையிலான படையும் ஆந்திராவுக்கு விரைந்தது.

ஹைதராபாத் விமான நிலையத்தில் இளங்கோவன் தலைமையில் தமிழக கமாண்டோ போலீஸ் படை சென்றுஇறங்கியபோது, வேன்களுடன் தயார் நிலையில் காத்திருந்தனர் ஆந்திர போலீசார்.

இரு மாநில போலீஸ் டீம்களிம் மெகபூப்நகரில் உள்ள சங்கர மடத்தின் கிளைக்கு விரைந்தன. அங்கு அவர்கள்போய்ச் சேர்ந்தபோது நேரம் 10 மணி.

சங்கராச்சாரியாரைக் கைது செய்ய வந்திருக்கிறோம், அவர் எங்கே என்று போலீசார் கேட்க, மடத்தில் இருந்தநிர்வாகிகளுக்கும் பாதுகாப்புக்கு இருந்த போலீசாருக்கும் ஒரே குழப்பம்.

அவர்களிடம் விஷயத்தை போலீசார் விளக்கியபோது, சங்கராச்சாரியார் திரிகல் பூஜையில் இருப்பதாகத்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பூஜை முடியும் வரை போலீசார் அமைதியாக காத்திருந்தனர்.

பின்னர் அவரைக் கைது செய்து கொண்டு, ஹைதாராபாத் கிளம்பியது இந்தப் படை. ஹைதாரபாத்தில் இந்தவிமானம் கிளம்ப சிறிது தாமதமானது.

சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னையிலும் பத்திரிக்கை நிறுவனங்களுக்கு செய்தி கிடைக்க 12மணி முதல் விமான நிலையத்தில் தேவுடு காத்தனர் நிருபர்களும், போட்டோகிராபர்களும்.

அதிகாலை 3 மணிக்கு விமானம் வந்து சேர, ரன்வேயில் இருந்து விமானத்துறையின் வேன் மூலம் வெளியேஅழைத்து வரப்பட்ட சங்கராச்சாரியார் அங்கு வந்ததும் மடத்துக்குச் சொந்தமான டாடா சுமோவுக்குமாற்றப்பட்டார்.

இந்த சிறிய இடைவெளியில் நிருபர்களையும், காஞ்சி மட நிர்வாகிகளையும் பார்த்துவிட்ட சங்கராச்சாரியார்அவர்களை நோக்கி வர, போலீசார் அவரை தடுத்து சுமோவில் ஏற்றிக் கொண்டு விரைந்தனர்.

அதிகாலை 4.30 மணிக்கு காஞ்சிபுரம் அழைத்து வரப்பட்ட சங்கராச்சாரியார், விஷ்ணு காஞ்சியில் உள்ள மகளிர்காவல் நிலைய வளாகத்தில் எஸ்.பியின் அறையில் அமர வைக்கப்பட்டார். அங்கு சில அதிகாலை பூஜைகளைசெய்த சங்கராச்சாரியார், டீ கேட்க, சுடச்சுட டீ வாங்கித் தந்தனர் போலீசார்.

பின்னர் மாஜிஸ்திரேட் உத்தமராஜுக்குத் தகவல் தரப்பட அவர் நீதிமன்றத்தை காலை 6 மணிக்கே திறக்கச்செய்தார். இதையடுத்து அவர் முன் சங்கராச்சாரியார் 6.30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நிருபர்களை நீதிமன்றத்துக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. சுமார் 1 மணி நேரம் விசாரணையைநடத்தி முடித்த மாஜிஸ்திரேட் சங்கராச்சாரியாரை வரும் 26ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் உள்ளே வைக்கஉத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து வேலூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சங்கராச்சாரியார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+