போலீசுக்கு ஆதரவாய் கதிரவன் மீண்டும் பல்டி
காஞ்சிபுரம்:
முதலில் சங்கராச்சாரியாருக்கு எதிராக வாக்குமூலம் தந்துவிட்டு, பின்னர் போலீசார் துன்புறுத்தியதால் அப்படிச் சொன்னேன் என்று பல்டிஅடித்த கதிரவன், மீண்டும் ஒரு முறை பல்டி அடித்துள்ளான். போலீசார் தன்னை துன்புறுத்தவில்லை என்று இப்போது கூறியுள்ளான்.
சங்கரராமனைக் கொல்ல படையை ஏவிவிட்ட அப்புவிடம் டிரைவராகவும் கூலி வேலையாளாகவும் இருந்தவன் கதிரவன்.
இவன் முதலில் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் தாமோதரன் முன் 19ம் தேதி ஆஜராகி, பூட்டப்பட்ட அறையில் ரகசிய வாக்குமூலம் தந்தான்.அப்போது, சங்கராச்சாரியாரின் உத்தரவின்பேரில் கொலையாளிகளை அப்பு அனுப்பியததிாகவும், தானே முன்னின்று கொலையாளிகளுக்குபண பட்டுவாடா செய்ததாகவும் கூறியிருந்தான்.
சுமார் 2 மணி நேரம் இவ்வாறு அப்ரூவராக மாறி வாக்குமூலம் தந்தான்.
இந் நிலையில் 24ம் தேதி காவல் நீட்டிப்புக்காக மாஜிஸ்திரேட் உத்தமராஜன் முன் ஆஜர்படுத்தப்பட்டபோது, பல்டி அடித்தான் கதிரவன்.
தன்னை போலீஸார் 5 நாட்களாக தொடர்ந்து விதத்திலும் கடுமையாக சித்திரவதை செய்ததால் தான் சங்கராச்சாரியாருக்கும் அப்புவுக்கும்எதிராக வாக்குமூலம் தந்ததாகவும், அப்படி சொல்லச் சொல்லி போலீசார் தன்னை அடித்து, உதைத்தாகவும் கூறினான்.
இதனால் போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். முக்கிய சாட்சியின் பல்டியால் வழக்கில் பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக அரசும் கருதியது.
இந் நிலையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் கதிரவன் மீது பண பட்டுவாடா செய்ததாக வழக்கு உள்ளதால், நேற்றுசைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவன் ஆஜர்படுத்தப்பட்டான்.
அப்போது மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரியிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் தந்த கதிரவன், தன்னை போலீசார் துன்புறுத்தவில்லை,அடிக்கவில்லை என்றான்.
இதன்மூலம் தனது முந்தைய நிலையில் இருந்து மீண்டும் பல்டி அடித்துள்ளான் கதிரவன். மீண்டும் கதிரவன் போலீசாருக்கு ஆதரவாகத்திரும்பியிருக்கிறான்.
இதனால் போலீசார் நிம்மதி அடைந்திருந்தாலும், இப்படி நாளொரு பல்டி அடிக்கும் கதிரவனின் சாட்சியத்தை வைத்துசங்கராச்சாரியாருக்கு எதிராக நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது என சங்கர மடத்தின் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
அடித்து, உதைத்து வாக்குமூலம் வாங்கினர்: கதிரவன்
பணத் தகராறால் சிக்கிய கொலையாளிகள்
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications