அண்ணா நகர் ரமேஷ் வழக்கு காஞ்சிக்கு மாற்றம்?
சென்னை:
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பராக இருந்த அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்துடன்தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வழக்கை காஞ்சிபுரத்திற்கு மாற்ற காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
திமுக ஆட்சி போய் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது தெய்வசிகாமணி என்ற காண்டிராக்டர் போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், திமுக முன்னாள் எம்.பி. பரசுராமன், அண்ணா நகர் ரமேஷ், ரெளடி பங்க் குமார் ஆகியோர் தன்னை மிரட்டி ரூ. 7 கோடிகேட்டதாக புகார் கூறியிருந்தார். இதையடுத்து 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ரமேஷ்தலைமறைவாகி விட்டார்.
விசாரணைக்காக ரமேஷை போலீஸார் தேடி வந்தனர். இந் நிலையில் தனது மனைவி காஞ்சனா மற்றும் 3 குழந்தைகளுடன் விஷம்சாப்பிட்டு ரமேஷ் பிணமாகக் கிடந்தார். ரமேஷ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர் குடும்பத்துடன் கொலைசெய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அப்புவின் கைவரிசை:
இந்த விசாரணையில் தொய்வு ஏற்பட்டிருந்தது. தற்போது சங்கரராமன் கொலை வழக்கு படு வேகமாக இருக்கும் நிலையில்ரமேஷ் தற்கொலை வழக்கு தூசி தட்டப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் ரமேஷ் சாவில் அப்புவுக்கு மிக முக்கியதொடர்பு இருப்பதாக போலீஸார் உறுதியாக நம்புகின்றனர்.
அப்பு மிரட்டல் காரணமாகவே தனது குடும்பத்துடன் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் கூறுகிறார்கள்.அப்புவை தூண்டியது யார், எதற்காக அவர் ரமேஷை மிரட்டினார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
இந்த வழக்கை தற்போது காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்கு மாற்ற போலீஸார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அப்புவுக்கும்,அப்போதைய திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இருவரும்தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். ஆற்காடு வீராசாமியின் வலது கரம் என்று கூறப்பட்டவர் அப்பு.
திமுகவுக்கும் சிக்கல்:
ஆற்காடு வீராசாமி மட்டுமல்லாது, ஸ்டாலின், திமுக வட சென்னை மாவட்ட செயலாளர் எல்.பலராமன் ஆகியோருக்கும் அப்புநெருக்கமானவராக இருந்திருக்கிறார். எனவே ரமேஷ் விவகாரத்தை வைத்து பல திமுக புள்ளிகளை வளைக்க அதிமுக அரசுதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications