நக்கீரன் மீது பாய்கிறது பாஜக
சென்னை:
ஜெயேந்திரர் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் வீடியோ புகைப்படங்களை நக்கீரன் பத்திரிக்கைக்கு கொடுத்தபோலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சி கோரியுள்ளது.
பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் ராஜேந்திரன் இதுதொடர்பாக வெளியிட்டுள் அறிக்கையில், போலீஸில் ஒருவர் அளிக்கும்வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லை. வாய் மூலமாகவோ அல்லது எழுத்துமூலமாகவே வாக்குமூலம் தர வேண்டும் என்றுதான் சட்டத்தில் உள்ளது.
ஆனால் ஜெயேந்திரர் வழக்கில் புலன் விசாரணை என்ற பெயரில் அவரை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசும்,காவல்துறையும். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஜெயேந்திரர் விஷயத்தில் போலீஸார் சட்டவிரோதமாக நடக்கிறார்கள். மனித உரிமைகளுக்கு மாறாக அவர்கள் புலன்விசாராணை நடத்துகின்றனர்.
உண்மையான குற்றவாளிகள் மீது குற்றம் சுமத்தாமல், ஜெயேந்திரர் பற்றி தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதும், அவரைப்பற்றி ஆபாசமான செய்திகளை வெளியிடுவதுமே புலன் விசாரணையின் நோக்கமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
கதிரவன் கொடுத்த வாக்குமூலம் உடனடியாக பத்திரிக்கைகளில் வெளியானது. இதை பத்திரிக்கைகளுக்குக் கொடுத்தது யார்என்று விசாரிக்க வேண்டும். அதேபோல, ஜெயேந்திரர் அளித்த வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டு அதில் சிலவற்றைபுகைப்படங்களாக ஒரு வாரப் பத்திரிக்கை (நக்கீரன்) வெளியிட்டுள்ளது.
இது சட்டவிரோதமான செயல். போலீஸாரைத் தவிர வேறு யாரும் இந்தப் படங்களை அப்பத்திரிக்கைக்குக் கொடுத்திருக்கமுடியாது. உள்நோக்கத்துடன் கூடிய செயல் இது. அந்தப் படங்களைப் பார்க்கும் இந்துக்கள் மட்டுமன்றி, நாகரிக மனம் உடையஅனைவரது மனங்களும் புண்படும்.
போலீஸ் விசாரணை, பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற பெயரில் தனிப்பட்ட ஒருவரது கண்ணியத்தை மீறும் செயலை யாரும்அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார் ராஜேந்திரன்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம்











Click it and Unblock the Notifications