சீரான நிலையில் நரசிம்ம ராவ் உடல்நிலை: மருத்துவர்
டெல்லி:
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
83 வயதான ராவ் ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அவருக்கு நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு மாரைடப்புஏற்பட்டது. இதையடுத்து அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது இதயத் துடிப்பை சீராக்க பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது.
இப்போது அவரது உடல் நிலை சீரடைந்து வருவதாகவும், சீரற்ற நிலையில் இருந்த இதயத்துடிப்பு சரி செய்யப்பட்டதாகவும்மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ராவின் ரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு தற்போது சீராக இருக்கிறது. அவர் இப்போது அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.மருத்துவர்கள் குழு தொடர்ந்து அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
நரசிம்மராவுக்கு நீரிழிவு நோயும் இருப்பது குறிப்பிடத்தக்கது.