விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கனா கண்டேனடி' சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடங்கப்பட்டு வெறும் 4 மாதங்களே ஆன நிலையில் சீரியல் கிளைமேக்ஸை நோக்கி நகர்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளதால், சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

அதிலும், "இந்த சீரியலுக்கு பதிலாக ஸ்டாலின் - நிரோஷா நடிக்கும் புதிய சீரியல் வரப்போகிறதா?" என்ற கேள்விதான் தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Kana Kandenadi Vijay TV Stalin Nirosha Onna Irukka Kathukkanum

ஆரம்பத்திலேயே ட்ரோல்

மூன்று பெண்களின் வாழ்க்கை, நட்பு, குடும்ப போராட்டங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சீரியல் தான் 'கனா கண்டேனடி'. சன் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'தென்றல்' சீரியலின் பாணியில் இந்த தொடர் உருவாகியிருந்தது. அதே தயாரிப்பு நிறுவனமான விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்திருந்ததால், தொடக்கம் முதலே "இது தென்றல் 2வா?", "பழைய கதையை புதிய பெயரில் எடுத்திருக்கிறார்களா?" என்று சமூக வலைதளங்களில் ட்ரோல்கள் குவிந்தன.

சீரியலில் சைத்ரா, கவிதா சம்பத், சஞ்சனா மற்றும் ஜாய்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

TRP-யில் சரிவு

சீரியல் ஆரம்பிக்கப்பட்டபோது ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு இருந்தாலும், பின்னர் அதற்கான வரவேற்பு எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே சீரியலை விரைவாக முடிக்க சேனல் தரப்பு முடிவு செய்திருக்கலாம் என்ற பேச்சும் சின்னத்திரை வட்டாரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

கிளைமேக்ஸ் ஷூட்டிங்

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 'கனா கண்டேனடி' சூட்டிங் ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் பரபரப்பான கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில வாரங்களில் இறுதி எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த தொடரை தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கு பதில்

கனா கண்டேனடி முடிவடையும் தகவலுடன் சேர்த்து தற்போது மற்றொரு சீரியல் பற்றிய பேச்சும் அதிகரித்துள்ளது. அதுதான் ஸ்டாலின் மற்றும் நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கணவன் மனைவி கதாபாத்திரங்களில் நடித்த ஸ்டாலின் மற்றும் நிரோஷா மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய சீரியலின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் இந்த சீரியலுக்கு 'லட்சுமி மெஸ்' என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் அந்த பெயர் மாற்றப்பட்டு 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' என்று அறிவிக்கப்பட்டது. இந்த பெயர் மாற்றமே ரசிகர்களிடம் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

Kana Kandenadi Vijay TV Stalin Nirosha Onna Irukka Kathukkanum

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஃபீல் மீண்டும் வருமா?

இந்த புதிய சீரியலை இயக்குவது சின்னத்திரையில் வெற்றி சீரியல்களை கொடுத்த இயக்குநர் டேவிட் சார்லி. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களை இயக்கிய அனுபவம் கொண்ட அவர், தற்போது இந்த புதிய சீரியலை இயக்கி வருகிறார்.

ஸ்பெக்ட்ரம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த சீரியலில் மகேஷ் சுப்ரமணியம், சமந்தா, வசந்த் வசி, அஜித்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மளிகை கடையில் இருந்து ஹோட்டலுக்கு

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு மளிகை கடையை மையமாக வைத்து குடும்ப உறவுகள் சொல்லப்பட்டன. அதேபோல் 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' சீரியலில் ஒரு ஹோட்டலை மையமாக வைத்து தந்தை - மகன்கள் உறவு, குடும்ப பாசம், சகோதரர்களுக்கிடையேயான சண்டைகள் மற்றும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், "இது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஃபீலை மீண்டும் கொடுக்குமா?" என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

"கனா கண்டேனடி முடிவடைவது வருத்தம் தான். ஆனால் ஸ்டாலின் - நிரோஷா ஜோடியை மீண்டும் பார்க்க ஆவலாக இருக்கிறோம்", "பாண்டியன் ஸ்டோர்ஸ் டீம் என்பதால் நிச்சயம் நல்ல சீரியல் இருக்கும்", "லட்சுமி மெஸ் பெயரே நல்லா இருந்தது... ஆனா புதிய பெயரும் வித்தியாசமா இருக்கு" என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒருபுறம் 'கனா கண்டேனடி' முடிவடையும் சோகம்... மறுபுறம் 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' தொடங்கும் எதிர்பார்ப்பு... இந்த இரண்டு விஷயங்களும் தற்போது விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+