காங். தலைவர் பதவி: இளங்கோவன் போட்டி?
சேலம்:
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் கூறுவேன் என்று மத்தியதொழில்துறை இணை அமைச்சர் இளங்கோவன் கூறினார்.
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் காங்கிரஸ் உள்கட்சி நிர்வாகிகள் தேர்தலை கீழ்மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை நடத்துவது குறித்து நான்,தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் மற்றும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மேலிடத்தில் வலியுறுத்தியுள்ளோம்.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறும் என நம்புகிறேன். தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுவேனா என்பதற்கு இப்போதுபதில் கூற முடியாது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும் இக் கேள்விக்கு பதில் அளிப்பேன்.
காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக் கட்சி கண்டவர்கள் எல்லாம் மீண்டும் சேர்ந்துள்ளனர். இப்போது அனைவரும்ஒற்றுமையாகவே உள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று தெரியவில்லை. சேலம் மாவட்டமுன்னாள் காங்கிரஸ் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலையாகி 2 ஆண்டுகள் ஆன பின்பும் குற்றவாளிகள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட விதம் தவறு. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை தொடர்புபடுத்திமத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி பேசுவது கண்டிக்கத்தக்கது.
உமாபாரதியை பாஜகவினரே ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் எந்த கட்சியில் இருக்கிறார் என்பதும் தெரியவில்லை.
மணல் கொள்ளையை தடுக்க முயன்று கொலை செய்யப்பட்ட துணை தாசில்தார் குடும்பத்திற்கும், சங்கர்ராமன் குடும்பத்திற்கும்ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இது கொலை செய்யப்பட்டால் ரூ.5 லட்சம் என்ற தவறான பாதைக்கு வழிவகுக்கும் என்றுகூறினார்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications