ஜெயேந்திரர் கைதில் கவர்ச்சி களை: கருணாநிதி கோபம்
சென்னை:
ஜெயேந்திரர் கைதில் கவர்ச்சிக் களை இருக்க வேண்டும் என்பதற்காக கலையுலகப் பெண்மணிகளை அரசு களங்கப்படுத்துவதாக திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலியில் கேள்வி பதில் பகுதியில் கருணாநிதி எழுதியிருப்பதாவது:
ஜெயேந்திரர் கைதில் கவர்ச்சிக் களை வேண்டும் என்பதற்காக கலையுலக பெண்மணிகளை களங்கப்படுத்துகிறார்கள். அளவுக்கு மீறினால்அமிர்தமும் நஞ்சு என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் ரேசன் கார்டுகளில் எப்போது பார்த்தாலும் குழப்பம்தான். இப்போதும் புதிதாக 38 லட்சம் பேருக்கு புதியஅட்டை தரப் போவதாக கூறி, தேதியையும் அறிவித்து விட்டு இன்னும் ஆய்வே முடியவில்லை என்று இப்போது கூறுகிறார்கள். என்னஆட்சியோ?.
இவ்வாறு கூறியுள்ளார் கருணாநிதி.
சொர்ணமால்யாவைத் தொடர்ந்து சுகன்யா, ஸ்ரீவித்யா என பல நடிகைகளின் பெயர்களும் சங்கராச்சாரியாரின் விஷயத்தில் அடிபட்டுவரும் நிலையில் கருணாநிதி இவ்வாறு எழுதியுள்ளார்.
மேலும் கருணாநிதி எழுதியிருப்பதாவது:
வீராணம் திட்டத்தினால் சென்னை மக்களுக்கு பலனில்லாமல் போய்விட்டது. இந் நிலையில் வீராணம் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கிவைக்க பெரம்பலூர் போகிறார் ஜெயலலிதா. இதன்மூலம் வீரணம் திட்டத்தால் புண்ணியமில்லை என்பது நிரூபணமாகிவிட்டது.
கருணாநிதியும் அத்வானியும் கைது செய்யப்பட்டபோது கூட சொந்தக் காரில் தான் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டார்கள் என்று தம்பிதிருநாவுக்கரசர் கூறியிருக்கிறார். அத்வானியை எப்படி கொண்டு சென்றார்களோ தெரியாது. என்னை நள்ளிரவில் அடித்து உதைத்துபோலீஸ் வேனில் தான் இழுத்துச் சென்றார்கள்.
நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பும் முடிவு நல்ல விஷயம். இதை சட்டமன்றங்களுக்கும் கூட விரிவுபடுத்தலாம் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications