மனித உரிமை மீறல்: பெர்னாண்டஸ்
சென்னை:
ஜெயேந்திரர் கைதில் மனித உரிமை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஒரு மடாதிபதியை நடத்தும் விதம் கவலையளிக்கிறதுஎன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
சென்னை வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில் மனித உரிமை மீறல் அப்பட்டமாக நடந்துள்ளது. இப்போதும் அவர் நடத்தப்படும் விதமும் மனிதஉரிமை மீறல்தான். அவர் ஒரு புகழ்பெற்ற மடாதிபதி. அவரை இவ்வாறு நடத்துவது சரியல்ல.
பாஜக முக்கிய தலைவர்கள் மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி போன்றவர்கள் ஜெயேந்திரர் கைது விவகாரத்தில்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பங்கிருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். அதற்கான ஆதாரங்கள் அல்லது தகவல்கள் ஏதாவதுஅவர்களுக்கு கிடைத்திருக்கலாம்.
அவ்வாறு இல்லாமல் உறுதியாக அவர்களால் கூற முடியாது. ஆதாரங்களைத் தேவைப்படும்போது வெளியிட நினைத்திருக்கலாம்.
ஜம்மு - காஷ்மீர் எல்லைப்புறங்களில் இருந்து படைகள் குறைக்கப்பட்டதை பொது இடத்தில் வைத்து பேசுவது சரியல்ல. ஒரு வரியில்இதற்கு பதில் கூற முடியாது என்று கூறினார்.
ஜெயேந்திரரை கைது செய்தது தமிழக அரசு. ஆனால், மத்திய அரசையும், சோனியாவையும் சிலர் கடுமையாக விமர்சிப்பது ஏன் என்றகேள்விக்கு, நான் அவ்வாறு யாரையும் விமர்சிக்கவில்லை என்று மட்டும் பதில் தந்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications