வீரப்பனை நல்லவனாக்காதீர்கள்: விஜயகுமார்
சென்னை:
மனித உரிமையின் பெயரால் சந்தனக் கடத்தல் வீரப்பனை நல்லவனாகச் சித்திரிக்க முயற்சிப்பது தவறு என்று அதிரடிப்படைத் தலைவர்விஜயகுமார் தெரிவித்தார்.
சென்னைப் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். சார்பாக நடத்தப்பட்ட அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான ஆளுமைத் திறன் மேம்பாட்டுக்கருத்தரங்கில், அவர் பேசியதாவது:
வீரப்பன் கொலையில் போலீஸார் தங்களது கடமையைச் செய்தனர். மனித உரிமை என்ற பெயரால் வீரப்பனுக்கு ஆதரவாகச் செயல்படும்சிலருக்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை.
வீரப்பன் ஒரு இரக்கமற்ற கொலையாளி. வீரப்பனை நல்வழிப்படுத்த முயன்ற எஸ்.பி. ஹரிகிருஷ்ணா உள்ளிட்ட ஏராளமான போலீஸார்மற்றும் வனத்துறையினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வீரப்பன் பயங்கரமாக முறையில் கொலை செய்திருக்கிறான்.
அப்படிப்பட்டவனை அவனை நம்ப வைத்து, வீழ்த்தியது நூற்றுக்கு நூறு சதவீதம் சரிதான்.
வீரப்பன் சரண் அடைவதற்கு காவல்துறை முழு வாய்ப்பு அளித்தது. ஆனால், தன்னைப் போலவே மற்றவர்களையும் அவன் கருதியதால்போலீஸாரை நம்பவில்லை.
வீரப்பன் ஒரு தமிழ் தீவிரவாதி என்பது சரியல்ல. அவனுக்கு சரியாக தமிழ் பேச வராது. தனது குற்றங்களை மறைக்க அவன் தீவிரவாதிஎன்ற போர்வையை போர்த்திக் கொண்டான்.
தீவிரவாதிகள் என்றால் அவர்களுக்கென்று இலக்கு, லட்சியம், நோக்கம், தியாகம் இருக்கும். ஆனால் வீரப்பனிடம் ஒன்றும் இல்லை.அவனை நல்லவனாகவோ, தலைவனாகவோ சித்தரிக்க முயற்சிப்பதே தவறு. மற்றவர்களை சித்திரவதை செய்யாமல் இருப்பதும், தீங்குவிளைவிக்காமல் இருப்பதும் கூட மனித உரிமைதான்.
இங்குள்ள மாணவர்களுக்கு சில விஷயங்களை கூற விரும்புகிறேன். பிரச்சினைகள், தோல்விகளைக் கண்டு தளர்ந்து விடவேக் கூடாது.கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடக் கூடாது. வெற்றிகளைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். உயர்வு அடையும் போது வானில்பறக்கும் பறவையைப் போல அனைத்து விஷயங்களும் புலப்படும். ஆனாலும், நெருக்கடியால் நமது நிதானத்தை இழந்து விடக் கூடாது.
தியாகம் செய்யாமல் எதையும் பெற முடியாது. சாதனைகள் படைப்பதில் சுயநலவாதிகளாக இருப்பதில் தவறு இல்லை. விரக்தி நிலைஏற்படும்போது மனத் தளர்ச்சி அடையக் கூடாது.
தீவிரவாதிகளை ஒடுக்க போலீஸாரைப் பயன்படுத்தலாம். ஆனால் தீவிரவாதத்தை ஒடுக்க, சமூக ரீதியிலான நடவடிக்கைகளை அரசுமேற்கொள்ள வேண்டும். மக்களைக் காக்க உள்ள கூர்மையான ஆயுதம் காவல்துறை. அதை அடிக்கடி பிரச்சினைகளை தீர்க்க பயன்படுத்தக்கூடாது என்றார் அவர்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications