அத்வானி கோவை வருகை: மிக பலத்த பாதுகாப்பு
கோவை:
பாலக்காட்டில் நடக்கும் பா.ஜ.க. பொதுக் குழு, செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க அக் கட்சியின் தலைவர் அத்வானி இன்று கோவைவந்துள்ளார்.
இதனால் கோவை நகரில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 1,000 போலீசார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் இருந்து சென்னை வழியாக விமானத்தில் கோவை வந்த அத்வானிக்கு பா.ஜ.கவினர் மிகச் சிறப்பான வரவேற்பளித்தனர்.கட்சியின் தமிழகத் தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் இல.கணேசன், எம்எல்ஏ ராஜா ஆகியோர் அவரை வரவேற்றனர்.
பின்னர் கோவை ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் இல்லத்துக்குச் சென்ற அத்வானி அங்கு கட்சியினரை சந்தித்துவிட்டு ஓய்வெடுக்கிறார்.பிற்பகலில் அவர் பாலக்காடு செல்கிறார். பாலக்காட்டில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் இரவு கோவை வந்து தங்குகிறார் அத்வானி.
நாளை அவர் பெங்களூர் செல்கிறார். அத்வானி ஒரு நாள் கோவையில் தங்க இருப்பதால் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
செல்போன்கள், தொலைபேசி உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதோடு உளவு போலீசாரும் பெருமளவில் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
விமான நிலையம், விருந்தினர் இல்லம், பாலக்காடு செல்லும் பாதை ஆகியவற்றில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. குண்டு துளைக்காத கார்களும் கோவைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் தான் அத்வானி பயணிக்க இருக்கிறார்.
மோப்ப நாய்களுடன் போலீசார் சோதனைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு மண்டல ஐஜி சுப்பிரமணியத்தின் நேரடிக் கண்காணிப்பில் கோவை சரக டிஐஜியான அசுதேஷ் சுக்லா தலைமையில், துணைகமிஷ்னர் நடராஜ், எஸ்பி தினகரனின் மேற்பார்வையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications