கைதிகள் மோதல்: ஜெயிலர் சஸ்பெண்ட்!
கோவை:
கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்தனர். இந்த மோதலைத் தடுக்கத் தவறியஉதவி ஜெயிலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை சிறை கண்காணிப்பாளராக இருந்த ராஜ்குமார் சமீபத்தில்தான் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். கைதிகளிடம் பாரபட்சம்காட்டுவதாக அவர் மீது சரமாரியான புகார்கள் எழுந்ததாலும் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதாலும் அவர் அதிரடியாக சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.
இந் நிலையில் கோவை சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த பயங்கர மோதல் தொடர்பாக உதவி ஜெயிலர் கந்தசாமி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், பெருமாள் ஆகிய இருவரும் கோவை சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். ராமலிங்கம் கொலை வழக்கில் கைதானவர். இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை கைதிகள் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ராமலிங்கம், பெருமாளை சில கைதிகள் கிண்டல்செய்துள்ளனர். இதனால் இருவரும் ஆத்திரமடைந்தனர். இதைத் தொடர்ந்து வாக்குவாதம் எழுந்து அது கைகலப்பாக மாறியது.
மற்ற கைதிகள் ஒன்றாய் சேர்ந்து கொண்டு ராமலிங்கத்தையும், பெருமாளையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் இருவருக்கும்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் இருவரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
இச் சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த உதவி ஜெயிலர் கந்தசாமி, மோதலைத் தடுக்க முயற்சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜார்ஜ் தியோடர் செல்வின், கந்தசாமியை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications