20 நாட்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் 20 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.இதைத் தயாரிக்கும் பணியில் சட்ட நிபுணத்துவம் பெற்ற 20 மூத்த காவல்துறை அதிகாரிகள், 100 போலீசார்ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரபரப்பான சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை போலீசார் அசுர வேகத்தில் நடத்தி வருகின்றனர்.விசாரணை கிட்டத்தட்ட இறுதி வடிவத்தை எட்டிவிட்டது.
இந்த வழக்கில் சங்கராச்சாரியார், அப்புவைச் சேர்த்து 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.காண்டிராக்டர் ரவி சுப்ரமணியம் மட்டும் இன்னும் சிக்காமல் உள்ளார்.
இந் நிலையில், கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 90 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றமே அவர்களை ஜாமீனில் விடுவித்து விடும்.
எனவே சங்கரராமன் கொலை வழக்கில் இன்னும் 20 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்யகாவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. குற்றப் பத்திரிக்கையை தயாரிக்கும் பணியில் 20 காவல்துறை அதிகாரிகள்,100க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிரமாக உள்ளனர்.
(இன்றுடன் சங்கராச்சாரியார் கைதாகி 42 நாட்கள் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது)
குற்றப் பத்திரிக்கையை எந்தவித குழப்பம், தவறும் இல்லாமல் தயாரிப்பதற்காக சட்ட வல்லுநர்களின்ஆலோசனையும் பெறப்பட்டு வருகிறது.
மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார் மேற்பார்வையில் குற்றப் பத்திரிக்கை தயாரிக்கும் பணிநடந்து வருகிறது.
தனது இத்தனை ஆண்டு வழக்கறிஞர் சர்வீசிலேயே இவ்வளவு வேகமான விசாரணையை பார்த்ததில்லை என உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜராபவருமான கே.டி.எஸ்.துல்சிநீதிமன்றத்திலேயே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications