மோட்ச தீபம் ஏற்றுங்கள்: ஜெயேந்திரர்

Subscribe to Oneindia Tamil

வேலூர் :

Jeyandrarகடல் கொந்தளிப்பில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய அனைத்து கோயில்களிலும் மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்றுஜெயேந்திர் கூறியுள்ளார்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயேந்திரரை விசுவ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் இன்று சந்தித்தார். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய வேதாந்தம்,

கடல் கொந்தளிப்பால் ஆயிரக்கணக்கானோர் இறந்திருப்பது தனக்கு மிகுந்த மனவேதனை தருவதாகவும், அவர்களுக்கு உதவ இயலாமல்தனது கைகள் கட்டப்பட்டிருப்பதாகவும் ஜெயேந்திரர் கூறினார்.

இயற்கைச் சீற்றத்தால் நடந்த பேரிழப்பால் சுவாமிகள் மனம் கலங்கிப் போயுள்ளார். அவரால் பேசக் கூட முடியவில்லை. தூங்க முடியாமல்தவிக்கிறார்.

குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஓடிச் சென்று உதவினேன். வீடுகள் கட்டித் தந்தேன். ஆனால், தமிழகத்தில் அது போன்ற சம்பவம்நடந்தபோது உதவ முடியாத நிலையில் இருக்கிறேனே என்று வருத்தப்படுகிறார்.

கடல் கொந்தளிப்பில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய அனைத்து கோயில்களிலும் மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்று அவர்கோரிக்கை விடுத்துள்ளார்.

சங்கரராமன் கொலைக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிலரது பிரஷ்ஷருக்கு அவர் இடம் தரவில்லை. இதனால் தான் அவரைநடிகைகள், அனுராதா ரமணன் என்று சொல்லி அவமானப்படுத்துகிறார்கள். இளையவரை காட்டு பங்களாவுக்கு காரில் வரஅனுமதிக்காமல் 300 மீட்டர் நடக்க வைத்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள் போலீசார் என்றார் வேதாந்தம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+