For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே நாளில் குவிந்த ரூ.57.57 லட்சம் நிவாரண நிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

The Govt Guest house in Mamallapuram

கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அனைத்து தரப்பினரும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளித்தநன்கொடை நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.57.57 லட்சமாக சேர்ந்தது.

தலைமைச் செயலகத்தில் முதல்வரிடம் மதுவிலக்கு கமிஷனர் அலுவலகம், டாஸ்மாக் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத் தொகைரூ.2.57 லட்சத்தை மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை செயலாளர் செல்வம், கமிஷனர் மோகன், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சோ.அய்யர்ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்தனர்.

ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் சார்பில் இதன் தலைவரும் சென்னை போலீஸ் கமிஷனருமான ஆர்.நடராஜ், டி.ஜி.பி., கோவிந்த் ஆகியோர்ரூ. 2 லட்சத்துக்கான காசோலை முதல்வரிடம் அளித்தனர். அதியமான் கல்வி அறக்கட்டளை சார்பில் முன்னாள் அமைச்சர் தம்பிதுரை ரூ.10லட்சம் வழங்கினார்.

மோகன் ப்ரிவரீஸ் நிறுவனத் தலைவர் நந்தகோபால் ரூ. 25 லட்சமும், நடிகர் அஜீத் ரூ. 10 லட்சமும், நடிகர் விஜய் சார்பில் அவரது தந்தைசந்திரசேகரன் ரூ.5 லட்சமும் வழங்கினார்கள். அதேபோல் நடிகர் சூர்யா ரூ. 2 லட்சமும், நடிகை லட்சுமி ரூ.1 லட்சமும் முதல்வரிடம்அளித்தனர்.

நேற்று மட்டும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 57 லட்சத்து 57 ஆயிரத்து 586 நிதி சேர்ந்தது.

வீட்டு வசதி வாரிய ஊழியர்கள் அனைவரும் ஒருநாள் ஊதியத்தையும், தமிழ்நாடு சிறப்பு ஊராட்சி பணியாளர்கள் ஒரு நாள்ஊதியத்தையும் நிவாரண நிதியாக அளிக்க முன்வந்துள்ளனர்.

அரியானா ரூ.3 கோடி உதவி:

இதற்கிடையே அரியானா அரசு சார்பில் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு 3 கோடி ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் ஒரு நாள் சம்பளம்:

இந் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்க முன்வந்துள்ளனர். இந்தியகிரிக்கெட் வீரர்களின் சங்கத் துணை தலைவர் அருண்லால் இதனைத் தெரிவித்தார்.

மேலும் நிதி திரட்ட ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் காட்சி கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்துள்ளன.

ஏர்டெல் ரூ.1 கோடி:

இதேபோல் ஏர்டெல் செல்போன் நிறுவனத்தார் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளிப்பதாக அறிவித்துள்ளனர். அந் நிறுவனத்தின்தலைவர் சுனில் பார்தி மிட்டல் இத் தகவலைத் தெரிவித்தார்.

பங்காரு அடிகளார் உதவி:

இதற்கிடையே மேல்மருவத்தூரில் இருந்து 504 அரிசி மூட்டைகளை பங்காரு அடிகளார் சென்னைக்கு அனுப்பி வைத்தார். தமிழகம்முழுவதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2,000 மூட்டை அரிசி அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆதிபராசக்திமருத்துவக் குழுவினரால் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தியன் வங்கி உதவி:

இதற்கிடையே தேசிய நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்க இந்தியன் வங்கி முடிவெடுத்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச்சென்று உணவுப் பொட்டலங்கள், அரிசி, பாத்திரங்கள், ஆடைகள், பால்பவுடர் ஆகியவற்றை இந்தியன் வங்கி ஊழியர்கள்விநியோகித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X