கனமழை, வெள்ளம், கண்ணி வெடிகள்: திணறும் இலங்கை
கொழும்பு:
![]() |
இலங்கையில் சுனாமி தாக்குதலுக்கு 28,551 பேர் பலியாகியுள்ளதாக அந் நாட்டு தேசிய பேரழிவு நிர்வாக மையம் தெரிவித்துள்ளது. இதில்12,000க்கும் அதிகமானோர் வட-கிழக்குப் பகுதியில் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கடும் மழை காரணமாக மீட்புப் பணிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கன மழை காரணமாக இன்று அம்பாறைமாவட்டத்தில் 15 முகாம்களில் வெள்ளம் புகுந்தது. இதனால் சுனாமியால் தாக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள்அனைவரும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந் நாட்டில் சுமார் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,673 பேர் பலியாகியுள்ளனர், சுமார் 5,000 பேரைக் காணவில்லை என்றுநேற்று அதிபர் சந்திரிகா கூறியிருந்தார்.
இந் நிலையில் உயிர்ச் சேதம் மேலும் அதிகரித்துள்ளது. அங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 28,551 ஆக உயர்ந்துள்ளதாக தேசியபேரழிவு நிர்வாக மையத்தின் தலைவர் பண்டாரா தெரிவித்தார்.
12,482 பேர் காயமடைந்துள்ளதாகவும், 4,916 பேரை தொடர்ந்து காணவில்லை என்றும் கூறினார். பாதிக்கப்பட்ட 1.6 லட்சம் மக்கள் 770முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் இன்று கன மழையால் வெள்ளம் புகுந்ததால் சுமார் 10,000 மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர்.
வெள்ளம் காரணமாக ஜப்பானில் இருந்து வந்த மருத்துவக் குழுவினரால் சுனாமி பாதித்த பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை.
இலங்கையில் ஏற்பட்ட சாவுகளில் பெரும்பாலானவை தமிழர் பகுதிகளான வட-கிழக்கில் தான் நேர்ந்துள்ளன. அங்கு புலிகள் தான் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரு நாட்களாக கடும் மழை காரணமாக இங்கு மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சுனாமி மீட்புக்கு உலக நாடுகளில் இருந்து வந்த நிவாரண உதவியை தமிழர் பகுதிகளுக்கு இலங்கை அரசு முறையாக வழங்கவிலலை.இதனால் தாங்களே தனியாக நிதி திரட்டி நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் புலிகள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிதி மற்றும் நிவாரண உதவிகள் செய்யுமாறு உலக நாடுகளுக்கு புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மீட்புப் பணிகளுக்கு தொண்டர்களை அனுப்புமாறு சர்வதேச அமைப்புகளை புலிகள் கோரியுள்ளனர்.
ஆனால், சுனாமியால் புலிகள் மற்றும் ராணுவத்தினர் புதைத்த ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகள் பூமிக்கு வெளியே சிதறிக் கிடப்பதால்சர்வதேச அமைப்புகள் ஆட்களை அனுப்ப மறுத்து வருகின்றன.
இதையடுத்து கண்ணி வெடிகளை அகற்றும் திறமை மிக்க வீரர்கள் தங்களிடம் இருப்பதாகவும் இதனால் அச்சமின்றி வரலாம் என்றும்புலிகளின் தமிழ் மறுவாழ்வு மையம் அறிவித்துள்ளது.













Click it and Unblock the Notifications