ஜெயேந்திரர்: பாஜக தலைவர்கள் பிரார்த்தனை
டெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயேந்திரர் விரைவில் விடுதலையாக, பாஜக தலைவர்கள் இன்றுகூட்டுப் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
டெல்லியில் உள்ள ஸ்ரீதேவி காமாட்சி அம்மன் கோயிலில் இந்தப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் அத்வானி,கட்சியின் மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சிவராஜ், ஜனா கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தாச்சார்யாஉள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டு மணி நேரம் இந்தப் பிரார்த்தனை நடந்தது. அப்போது ஜெயேந்திரர் விரைவில் விடுதலையாக வேண்டும் என்று பாஜகதலைவர்கள் வேண்டிக் கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கோயில் நிர்வாக அறங்காவலர் உலச்சி கணேசன்,
ஜெயேந்திரர் மக்களிடம் அமைதியும், நன்மையும் ஏற்பட தொடர்ந்து பிரார்தித்து வந்தவர். அவரது விடுதலைக்காகவும், இந்துதர்மத்தைக் காப்பதற்காகவும் துறவிகள் எல்லோரும் பிரார்த்திக்க வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications