கணவன், மகனை இழந்த பெண்களுக்கு பென்ஷன்: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

The scene in Kanyakumari

சுனாமி தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்கும், மகன்களை இழந்த வயதான பெற்றோர்களுக்கும் மாதந்தோறும் உதவித் தொகை,இலவச அரிசி, வேட்டி, சேலை ஆகியவை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. ரூ. 123.92 கோடி முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டு நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.

சுனாமி தாக்குதலில் சீருடைகள், பாடப் புத்தகங்களை இழந்த மாணவ, மாணவியருக்கு அவற்றை இலவசமாக வழங்கவும், ஒரே நாளில்பெற்றோர்கள், உறவுகளை இழந்து அநாதைகளாக விடப்பட்ட குழந்தைகளைத் தத்தடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும்,அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந் நிலையில் சுனாமி தாக்குதலால் கணவர்களை இழந்த ஏராளமான பெண்களும், வளர்ந்து, சம்பாதித்து குடும்பத்தைக் காத்துக்கொண்டிருந்த தங்களது மகன்களை இழந்த பல வயதான பெற்றோர்களும் பிழைப்புக்கு வழியில்லாமல் வாடுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தற்போது தமிழக அரசு அமல்படுத்தி வரும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்றோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இந்தபெண்களுக்கும், பெற்றோருக்கும் உதவ உத்தரவிட்டுள்ளேன்.

அதன்படி தகுதியுள்ளோர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 200 உதவித் தொகை, தினசரி இலவச சத்துணவு,மாதம் 2 கிலோ அரிசி, வருடத்திற்கு 2 முறை ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு சேலையும் வழங்க உத்தரவிட்டுள்ளேன். சத்துணவுசாப்பிடாதவர்களுக்கு மாதம் 4 கிலோ அரிசி வழங்கப்படும்.

இந்த பயன், இன்னும் ஒரு வாரத்திற்குள் உரியவர்களுக்கு சென்று சேர வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+