சுனாமி நிதி: ரூ. 2லட்சத்திற்கு ஏலம் போன கேக்!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

The Scene in Coaltal area

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக கொண்டு வரப்பட்ட கேக் ரூ. 2லட்சத்திற்குஏலம் விடப்பட்டது. பின்னர் அந்தப் பணம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்க உதவுவதற்காக முதலமைச்சரின்பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டது.

உயர் நீதிமன்றக் கிளையில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடுவதற்காக 2 கேக்குள் வரவழைக்கப்பட்டிருந்தன.கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்பதற்காக மதுரை கிளையின் 5 நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றஅலுவலர்கள் என அனைவரும் கூடியிருந்தனர்.

அப்போது நீதிபதி பி.டி.தினகரன் ஒரு யோசனையைத் தெரிவித்தார். இந்தக் கேக்குளை வெட்டி சாப்பிடுவதற்குமுன்பாக இவற்றை ஏலம் விட்டால் என்ன? அந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை சுனாமி நிவாரண நிதிக்குவழங்கலாம் அல்லவா? என்றார்.

இந்த யோசனைக்கு பலத்த ஆதரவு கிடைத்தது. கேக்குக்கு ஆரம்ப ஏலத் தொகையாக ரூ. 25,000நிர்ணயிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பி.டி.தினகரனே ரூ. 25,001 என்று கூறி ஏலத்தைத் தொடங்கினார்.

இதையடுத்து வழக்கறிஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு கேக்கின் ஏலத் தொகையை உயர்த்தினர். ஏலம்விறுவிறுப்பாக மாறியது. தொகை ஏறிக் கொண்டே போய் கடைசியாக வழக்கறிஞர் சங்கங்களைச் சேர்ந்தஇருவரும் மேலும் ஒரு வழக்கறிஞரும் ஆகிய 3 பேர் தலா ரூ. 75,000க்கு கேக்குகளை ஏலம் கேட்டனர்.

இதனால் கேக்கை யாருக்குத் தருவது என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி தினகரன், 3 பேரும்சேர்ந்து ரூ 2 லட்சம் தர வேண்டும், பின்னர்

கேக்கை பங்கிட்டு அனைவருக்கும் கொடுக்கலாம் என்று யோசனை தெரிவித்தார்.

அதை 3 பேரும் ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து கேக்குகள் வெட்டப்பட்டு அனைவருக்கும்கொடுக்கப்பட்டது.

இதையடுத்து மூவரும் சேர்ந்து ரூ. 2 லட்சம் தர அதை அப்படியே சுனாமி நிவாரண நிதிக்கு வழங்குவதாக நீதிபதிதினகரன் அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+