தமிழகத்தில் மத்தியக் குழு: ஜெவுடன் ஆலோசனை
சென்னை:
![]() |
சுனாமி பாதித்த பகுதிகளைப் பார்வையிடவும் நிவாரண உதவிகள் குறித்து மதிப்பிடவும் உயர் மட்ட மத்திய குழுஇன்று தமிழகம் வந்தது. இந்தக் குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
மத்திய உள்துறைச் செயலாளர் ஏ.கே.ரஸ்தோகி, இணைச் செயலாளர் ஏ.கே. ஸ்ரீவத்சவா தலைமையில் 10 பேர் கொண்ட குழு காலைசென்னை வந்தது. இதில் விவசாயத்துறை, கூட்டுறவு, கால்நடை, குடிநீர் வினியோகம், சுகாதாரம், ஊரக வளர்ச்சி,சாலைப் போக்குவரத்து, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.
இக் குழுவினர் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். அப்போது சுனாமி பாதிப்பு குறித்தும், நஷ்டம்குறித்தும் ஜெயலலிதாவும் அதிகாரிகளும் மத்தியக் குழுவினருக்கு விவரித்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், உள்ளாட்சித் துறைச் செயலாளர் மற்றும்நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் இந்தக் குழுவினர் சென்னையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட காசிமேடு, ராயபுரம் ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டனர்.
இதையடுத்து இக் குழுவினர் 3 பிரிவாகப் பிரிந்து தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவுள்ளனர்.
ஒரு குழு நாளை நாகை மாவட்டம் செல்கிறது. அக்கரைப்பேட்டை கிராமத்தில் முகாமிட்டு நாகை மாவட்ட சேதங்களை இக் குழு ஆய்வுசெய்கிறது. இன்னொரு குழு கடலூரில் நாளை சுனாமி பாதித்த பகுதிகளைப் பார்வையிடுகிறது.
அடுத்த குழு கன்னியாகுமரிக்குச் சென்று அங்கு சேத மதிப்புகளை ஆய்வு செய்யவுள்ளது. தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்யும்மத்திய குழுவினர் வியாழக்கிழமை டெல்லி திரும்பி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தங்களது ஆய்வறிக்கையையும்,நிவாரண உதவி குறித்த பரிந்துரைகளையும் வழங்கவுள்ளனர்.
அந்தமானில் இன்னொரு குழு:
இதே போல இன்னொரு உயர் மட்டக் குழு அந்தமான் விரைகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமதிப்புகளை இந்தக் குழு ஆராயும்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இக் குழு தனது ஆய்வறிக்கையையும், நிவாரண உதவி குறித்தபரிந்துரையையும் வழங்கும்.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!













Click it and Unblock the Notifications