நாகை முகாமில் பட்டினியால் குழந்தை சாவு?
நாகப்பட்டணம்:
![]() |
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 2 வயது சிறுமி, உணவு கிடைக்காமல் இறந்ததாககூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வானவன்மாதேவி என்ற கிராமத்தில் இப்படி ஒரு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் தங்கியிருப்பவர்களுக்கு சரியானமுறையில் உணவு வழங்கப்படவில்லை.
இந் நிலையில், இம் முகாமில் தங்கியிருந்த 2 வயது சிறுமி உணவு கிடைக்காமல் பட்டினியால் மயங்கி விழுந்து பரிதாபமாகஇறந்திருக்கிறாள் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இச் சம்பவத்தையடுத்து முகாமில் தங்கியிருப்பவர்களும், மற்ற பொதுமக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்துதேவையான பால் பொருட்கள், பிற உணவுப் பொருட்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு ஊழியர்கள் சரியான முறையில் பணியாற்றவில்லை என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறோம். சிறுமி பலியான முகாமிற்கும் உணவு வினியோகத்தை அரசு ஊழியர்கள் சரிவர மேற்கொள்ளவில்லை.
உணவும், நிவாரணப் பொருட்களும் ஒரு பக்கம் குவிந்தாலும் அதை முறையாக வினியோகிக்க வேண்டிய ஊழியர்கள் அதைச் செய்யத்தவறி வருகின்றனர்.
இதே போலவே போலீஸ்காரர்களும் ஏதோ டூர் வந்தது மாதிரி தான் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றி வருகின்றனரே தவிர, மீட்புப்பணியிலும் நிவாரணப் பணியிலும் இவர்களது பங்களிப்பு மிகக் குறைவே.
ஆங்காங்கே மரத்தடியில் சேர் வாங்கிப் போட்டுக் கொண்டு கையில் குச்சியை வைத்தவாறு கதை பேசி பொழுதைக் கழித்து வருகின்றனர்காக்கிகள்.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!













Click it and Unblock the Notifications