மத்திய அரசிடம் ரூ.4,800 கோடி நிதி கோரும் ஜெ.
சென்னை:
![]() |
தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.4,800கோடி நிதியுதவி கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இன்று அவர் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:
தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் தற்போது மீட்புப் பணிகள் முடிவடைந்து நிவாரணம் மற்றும்மறுவாழ்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முழுமையான அளவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பெருமளவிலான நிதியுதவி மத்திய அரசிடமிருந்துதேவைப்படுகிறது.
மீட்புப் பணிகளுக்கு ரூ. 205.95 கோடி, தற்காலிக நிவாரணப் பணிகளுக்கு ரூ. 90 கோடி, தொற்றுநோய் தடுப்பு போன்றமருத்துவப் பணிகளுக்கு ரூ. 71 கோடி, உணவுப் பொருட்களை வினியோகம் செய்ய ரூ. 261 கோடி, தற்காலிக வீடுகள் அமைத்துக்கொடுக்க ரூ. 250 கோடி;
நிரந்தர வீடுகள் அமைத்துத் தர ரூ. 750 கோடி, சமுதாயச் சொத்துக்களை சீர் செய்ய ரூ. 709 கோடி, மறுவாழ்வுப் பணிகளுக்கு ரூ.1,500 கோடி, நாகை மாவட்டத்தில் கடலப்பைத் தடுக்க ரூ. 449 கோடி, சுற்றுச்சூழலை சரி செய்து மாங்குரோவ் காடுகளைஅமைக்க ரூ. 200 கோடி என மொத்தம் ரூ. 4,800 கோடி நிதி தேவைப்படுகிறது.
இதுதவிர 54,000 டன் உணவுப் பொருளும் உடனடியாக தேவைப்படுகிறது. மேலும், மீனவர்களுக்குத் தேவையான மீன் பிடிபடகுகள், உதிரிப் பாகங்கள், வலைகளை இறக்குமதி செய்ய சுங்க வரி விலக்கு அளிக்க வேண்டும், உள்ளூரிலேயே இதைத்தயாரிக்க கலால் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
முன்னதாக ஜெயலலிதா நேற்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நிவாரணப் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைநடத்தினார். அப்போது நிவாரணப் பணிகளுக்கும் மறுகட்டுமானப் பணிகளுக்கும் எவ்வளவு நிதி கோருவதுஎன்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!













Click it and Unblock the Notifications