அமிர்தானந்தமயி மடம் ரூ. 100 கோடி நிதியுதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Vivek oberai visits affected area

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதா அமிர்தானந்தமயி மடம் ரூ. 100 கோடி நிவாரண உதவியைஅறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மடத்தின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமிர்தனந்தமயி மடம் பல்வேறு திட்டங்களைத் தீட்டியுள்ளது.

இதன்படி வீடுகளை இழந்தவர்களுக்கு அம்ரிதா குடீரம் என்ற திட்டம் மூலம் இலவசமாக வீடுகள் கட்டித்தரப்படும். அனாதரவாகிவிட்ட குழந்தைகளையும் மடம் தத்தெடுத்துக் கொள்ளும்.

பெற்றோர்களை இழந்து பரிதவிக்கும் குழந்தைகளின் கல்விக்கும் மடம் உதவும்.

நாகை மாவட்டம் உள்பட பாதிக்கப்பட்ட பகுதிகளில் 10 நிவாரண முகாம்களை மடம் தொடங்கியுள்ளது. மேலும்கோவை அம்ரிதா விஸ்வ வித்யாபீடத்தைச் சேர்ந்த 13,000 மாணவர்களும் இந்த மாவட்டத்தில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் 3 நிவாரண முகாம்களும், காரைக்கால் பகுதியில் ஒரு முகாமும் அமைக்கப்பட்டு நிவாரணப் பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 வேலை இலவச உணவு, குடிநீர், போர்வைகள், சேலைகள், வேட்டிகள், மருந்துகள்,அடிப்படைப் பொருட்கள் ஆகியவை மடத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தமாக ரூ. 100 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை மடம்வழங்க இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+