அனாதையான குழந்தைகள் பெயரில் ரூ. 5 லட்சம் டெபாசிட்
சென்னை:
![]() |
சுனாமியால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகள், இளம் பெண்களின் பெயரில் ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுஅவர்கள் 18 வயதை எட்டியவுடன் அந்தப் பணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சுனாமி தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்கும், மகன்களை இழந்த வயதான பெற்றோர்களுக்கும் மாதந்தோறும் ரூ. 200உதவித் தொகை, மாதம் 2 கிலோ இலவச அரிசி, தினமும் இலவச சத்துணவு, வருடம் 2 முறை ஆண்களுக்கு வேட்டியும்,பெண்களுக்கு சேலையும் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசின் சத்துணவை ஏற்க மறுப்பவர்களுக்கு மாதம் 4 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந் நிலையில் அடுத்தகட்டமாக மறு வாழ்வுக்காக புதிய திட்டத்தையும் அறிவித்துள்ளார் ஜெயலலிதா.
இதன்படி பெற்றோரை இழந்து ஆதரவற்றுப் போய்விட்ட குழந்தைகள் பெயரில் தலா ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்யப்படும். அதேபோல பெற்றோரை இழந்த 14 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்கள் ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்யப்படும்.
குழந்தைகள், பெண்கள் 18 வயதை அடைந்தவுடன் அந்தப் பணம் அவர்களுக்கு வழங்கப்படும். 14 முதல் 18 வயதுக்குட்பட்டபெண் குழந்தைகள் உடனே அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களில் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்காக புதியமுகாம்களும் உடனே உருவாக்கப்படும்.
அந்த முகாம்களில் இந்தப் பெண்களுக்கு சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும் அளிக்கப்படும் என ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!













Click it and Unblock the Notifications