உதவி நிதி திரட்டும் ஜார்ஜ் புஷ் சீனியர், கிளின்டன்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

The Scene in Malathives

சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களுக்கு அஞ்சலி செலுத்த அமெரிக்க ஜனாதிபதி புஷ், அவரது மனைவி லாரா, முன்னாள்ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சீனியர் மற்றும் இன்னொரு முன்னாள் ஜனாதிபதியான பில் கிளின்டன் ஆகியோர் இந்தியத் தூதரகத்துக்குவருகை தந்தனர்.

மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவ ஜார்ஜ் புஷ் சீனியரும் பில் கிளின்டனும் இணைந்து நிதி திரட்டவும் முடிவுசெய்துள்ளனர்.

வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு வந்த அவர்கள், அஞ்சலி புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அதிபர் புஷ்,

சுனாமி தாக்குதலில் இருந்து மீண்டு வரும் இந்தியாவுக்கு அமெரிக்கா தோளோடு தோளாக துணை நிற்கும்.பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் இதைனத் தெரிவித்துள்ளேன். உயிரிழந்த இந்திய மக்களுக்கு என் நாட்டுமக்களின் சார்பில் அஞ்சலியை செலுத்துகிறேன்.

இந்தியாவுக்கு என்ன உதவி வேண்டுனாலும் செய்யத் தயார்.

தான் பாதிக்கப்பட்டிருந்தாலும் இலங்கைக்கும் மாலத்தீவுகளுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இந்தியா செய்துவரும் நிவாரண உதவிகள் போற்றத்தக்கவை.

இந்த விஷயத்தில் தனது தலைமைப் பண்பை இந்தியா நிரூபித்துவிட்டது. இதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கைபாராட்டுகிறேன். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பானுடன் இணைந்து சுனாமி பாதித்த நாடுகளுக்கு இந்தியாஉதவி வருகிறது என்றார்.

இதையடுத்துப்பேசிய அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர், அமெரிக்க அதிபர் மற்றும் முன்னாள் அதிபர்கள்இங்கு வருகை தந்து இந்திய மக்களுக்கு ஆதரவாகத் துணை நிற்பது வலி நிறைந்த எங்களுக்கு பெரும்மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

எனது தந்தையும் முன்னாள் அதிபருமான புஷ் மற்றும் கிளின்டன் இணைந்து பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவிசெய்ய நிதி திரட்டுவர். அமெரிக்க மக்கள் ஏற்கனவே உதவிகள் செய்ய ஆரம்பித்துவிட்டனர். மேலும் உதவவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்றார்.

இதையடுத்து நால்வரும் இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து தூதரங்களுக்கும் சென்று சுனாமியால்உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய புஷ், இப்போது தான் சுனாமியால் மிகவும் பாதிக்கப்பட்ட 4நாடுகளின் தூதரகங்களுக்கும் சென்று வந்தேன். நம் நாடு மிகவும் இரக்கம் மிக்கது என்பதையும் விரைவில்எங்கள் நாட்டின் உதவி உங்களை வந்து சேரும் என்பதையும் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறேன் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+