சுனாமியை கண்டறியும் தொழில்நுட்பம் சாத்தியமே: கலாம்
அகமதாபாத்:
![]() |
சுனாமி அலைகளைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை வெகு விரைவில் உருவாக்குமாறு இந்திய விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் அழைப்பு விடுத்துள்ளார்.
அகமதாபாத்தில் நடக்கும் 92வது அறிவியல் காங்கிரசில் இன்று கலாம் உரையாற்றினார். அவர் பேசுகையில்,
நில நடுக்கம் ஏற்படுவதை முன் கூட்டியே கண்டுபிடிக்க முடியாது தான். ஆனால், கடலுக்கடியில் அதி பயங்கரமான நில நடுக்கங்கள் ஏற்பட்டபின்னர் அதைத் தொடர்ந்து மாபெரும் சுனாமி அலைகள் ஏற்படுவதையும் அவை பயணிக்கும் திசையும் முன் கூட்டியே அறிந்து கொள்ளமுடியும்.
அதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவது சாத்தியம் தான். பயங்கரமான அதிர்வு கொண்ட பெரும் கடல் அலைகள் தான் சுனாமி.
இந்த அலைகளை முன் கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் தொழில்நுட்பத்தை நிலவியல் ஆராய்ச்சியாளர்கள், புவியியல் நிபுணர்கள்உருவாக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுக்குள் இந்தத் தொழில்நுட்பத்தை உருக்கிவிட வேண்டும்.
அதே போல நில நடுக்கம் ஏற்படுவதற்கு முன் தோன்று அதிர்வுகள் குறித்தும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். இதை வைத்து நிலநடுக்கம் வருவதையும் ஓரளவுக்கு யூகித்துவிட முடியும்.
இந்தியாவை ஊழலற்ற நாடாக மாற்ற தொழில்நுட்பத்தை அரசு அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். வறுமை, கல்வியின்மையைஒழிக்க வேண்டும், மக்களுக்கு நீதி விரைவில் கிடைக்கும் வகையில் நீதித்துறையின் செயல்பாடுகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றார்கலாம்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications