நாகையில் சீக்கியர்களின் அன்னதானம்
நாகப்பட்டனம்:
![]() |
பஞ்சாப் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியைச் சேர்ந்த சீக்கிய சமையல் நிபுணர்கள் நாகையில் முகாமிட்டுசுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறுசுவை விருந்து படைத்து வருகிறார்கள்.
பஞ்சாப் ஷிரோண்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி சார்பில் 100 சமையல்காரர்கள் நாகையில்முகாமிட்டுள்ளனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தினசரி அறுசுவை சமையல் செய்து பசி தீர்த்துவருகிறார்கள்.
வழக்கமாக சீக்கிய சமையல் வகைகளில் ரொட்டி, உருளைக்கிழங்கு சப்ஜி, தானிய வகைகள்தான் அதிகம் இடம்பெறும். ஆனால் நாகை மக்களுக்காக தங்களது சமையல் முறைகளையே மாற்றி சுடச் சுட சாம்பார், அரிசி சாதம்,தோசை, இட்லி என நம்மூர் ஐட்டங்களை சமைத்துக் கொடுத்து அசத்தி வருகிறார்கள் சீக்கிய சமையல்காரர்கள்.
சீக்கிய சமையல் குழுவின் தலைவரான பீபி ஜாகீர் கெளர் இதுகுறித்துக் கூறுகையில், நாகையில் சுனாமியால்பாதித்த மக்களுக்கு தினசரி சாப்பாடு செய்து தருகிறோம். இங்குள்ள மக்களுக்கு மிகவும் பிடித்தமான சாம்பார்,அரிசி சாதம், இட்லி, தோசை என தென்னிந்திய உணவு வகைகளை சுவையாக செய்து தருகிறோம்.
பஞ்சாப் எம்.எல்.ஏ சுர்ஜித் சிங் ரக்ரா தலைமையில் மொத்தம் 400 பேர் கொண்ட நிவாரணக் குழு தமிழகத்தில்முகாமிட்டுள்ளது. இதில் சமையல்காரர்கள் மட்டும் 200 பேர் என்றார் கெளர்.
சுர்ஜித் சிங் ரக்ரா கூறுகையில், தென்னிந்திய உணவு வகைகள் மட்டுமல்லாது இனிப்புகள், அதிக கரம் மசாலாஇல்லாத உணவு வகைகளையும் நாங்கள் சமைத்துத் தருகிறோம். எங்களது சமையல் மிகவும் அருமையாகஉள்ளதாக பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் கூறுகிறார்கள். இது எங்களுக்கு பெருத்த சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.
இதேபோல அந்தமான், நிக்கோபார் தீவுகளிலும் எங்களது சீக்கிய குழு முகாமிட்டுள்ளது என்றார் ரக்ரா. மொத்தம்28 ரயில் பெட்டிகளில் சீக்கிய குழுவினர் சமையல் பொருட்கள், உடைகள் உள்ளிட்டவற்றுடன் தமிழகம்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரக்ரா தொடர்ந்து கூறுகையில், எங்களது சமையலுக்கு உள்ளூர் மக்களும் பெரும் உதவி செய்து வருகின்றனர்.அரிசி, பருப்பு போன்றவற்றை பெறுவதிலும் எங்களுக்கு சிரமம் இல்லை என்றார்.
தானத்தில் சிறந்த அன்னதானத்தை செய்து வரும் சீக்கியக் குழுவினரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.













Click it and Unblock the Notifications